வியாழன், 1 ஏப்ரல், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 01 ஏப்ரல் 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

மன்னிப்பின் சிகரமாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக பிதாவானவர் தமது குமாரனை இவ்வுலகத்தில் அனுப்பி வைத்தார்.

 

கிறிஸ்துவும், ஒருவரை ஒருவர் மன்னிக்க சொன்னார்.

ஒரு முறை அல்ல, ஏழு எழுபது முறை... அதாவது பூரணமாக எத்தனை முறையானாலும் மன்னிக்க சொன்னார்.

 

தன் குமாரனை சிலுவையில் அறைந்த யூதர்கள் மீது தேவக் கோபம் மூளாதபடிக்கு தன்னுடைய கடைசி நிமிஷத்தில் கூட அவர்களுக்காக ஜெபம் செய்து நம்மனைவருக்கும் முன்மாதிரியை வைத்து போனார் இயேசுகிறிஸ்து.

 

சிலுவையே கொடுக்கப்பட்டாலும் எப்போதும், எல்லோரையும் மன்னிப்பது தான் கிறிஸ்தவர்களின் பிரதானமான குணம் !!

 

அழுதுக்கொண்டே படுத்தாலும், புதிய விடியலில் குழந்தை சிரித்துக்கொண்டே எழுவது போல புன்முறுவலோடு புதிய மனுனாக ஒவ்வொரு நாளையும் துவங்குவோம்.

 

அதற்கேற்ற நல்ல சமாதானத்தை தேவன் தருவாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443  

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக