*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மெய்யான திராட்சை செடியாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
காட்டுக் கொடி, எந்தச் செடியையும் சுற்றி வளரும்.
ஆனால், செடியை விட இவ்வகை கொடி மிக வேகமாக வளர்ந்து செடியே தெரியாத அளவிற்கு கொடிகள் மூடி வளர்ந்து செழிப்பாக இருக்கும்.
நாளடைவில், செடிக்கு போக வேண்டிய தண்ணீரையும், சத்துக்களையும் கொடி உறிஞ்சிக் குடிப்பதால் உரிமையாளர் அந்தக் கொடியை வேரோடு பிடிங்கிப்போடுவார்.
செடியாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் கிளைகளாக (கொடியாக) வளராமல், Founder, நிறுவனர், தலைவர் என்று சொந்தமாக வேர் வைத்து கிறிஸ்துவின் மீது சுற்றிக்கொண்டு எவ்வளவு வளர்ந்தாலும் தோட்டக்காரரான பிதாவாகிய தேவன் வேரோடு அறுத்து, களைந்து, பிடுங்கி எரித்துப்போடுகிறார். யோ. 15:1-2
நம் வளர்ச்சி கிறிஸ்துவின் அஸ்திபாரத்தில் மாத்திரமே இருக்க வேண்டும். தனி வேர் கொண்டு வளர்ந்தால் அக்கினி ஞானஸ்நானமே முடிவு. லூக்கா 3:16-17
அனுதின வசன வாசிப்பு என்று வாசிப்பதோடு நின்றுவிடாமல் நம் வாழ்க்கைத்தரத்தை “கிறிஸ்துவின் உபதேசத்தில்” மாற்றியமைத்துவிடவேண்டும்.
தேவனுடைய சகல அநுக்கிரகங்களும் உங்களோடு இருப்பதாக !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக