செவ்வாய், 30 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 30 மார்ச் 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

பரிசுத்த தேவனின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

வேத வசனம் கேட்டு,
விசுவாசித்து,
மனம்திரும்புதலுக்கு பின்னர் அடுத்த படியாகிய
ஞானஸ்நானம் எடுத்தபிற்பாடு -> இரட்சிப்பு வருகிறது. மாற்கு 16:16

வசனத்தை கேட்டதும்,
அல்லேலூயா, ஸோஸ்த்ரம், இயேசுவின் இரத்தம் ஜெயம்னு சொன்னதும் இரட்சிக்கப்பட்டுட்டேன், ஞானஸ்நானம் பிற்பாடு சமயம் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்பது வேதத்திற்கு முரணானது.

அப்.2:38ல் ஞானஸ்நானம் எடுத்தவர்களை 47ம் வசனத்தில் இரட்சிக்கப்படுகிறவர்கள் என்று தேவன் அழைக்கிறார்.

வசனத்தை ஏற்றுக்கொண்ட எவரும் ஞானஸ்நானத்தை தள்ளிப்போடவில்லை. இருதயத்தில் வசனம் உணரப்பட்டதும் நள்ளிரவானாலும் உடனடியாக எடுத்துக்கொண்டார்கள். அப். 16:14-15, 33, 9:18, 19:4-5

அம்மா, அப்பா, சபை, ஊர் ஜனங்கள், பிள்ளைகள் என்று எவரிடமும் அனுமதிக்காக காத்திருக்கவில்லை. இரட்சிப்பு என்பது அவரவரின் சொந்த ஆத்துமாவிற்கும் பரமக்கடவுளுக்கும் இடையிலானது.

ஞானஸ்நானத்திற்கு பிறகு, கிடைத்த இரட்சிப்பை, கடைசி பரியந்தம் பிடித்து இருக்கும் போது அந்த இரட்சிப்பின் நிச்சயம் பூரணமாகிறது. மத். 24:13

ஆலயத்திற்கு வந்தாலே இரட்சிப்பு என்றால், இயேசுவின் சொந்தக் கையாலே அப்பம் வாங்கின யூதாஸ் ஸ்காரியோத்தின் நிலைமையை நினைத்து பார்க்கவேண்டும்? யோ. 13:26-27.

நாம் தான் ஆலயம். கட்டிடம் அல்ல. கட்டிடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறு என்பதை அறியவேண்டும். 1கொரி. 3:17.

தொழுகை நடத்தும் கட்டிடத்தைக் கண்டதும் கண்ணீர் விட்டு, ஐயோ ஆண்டவரே, இத்தனை நாள் இந்த இடம் கிடைக்காமல் நாங்கள் தவித்துப்போனோம் என்று பூரிப்பதென்பது விக்கிரகாராதனை. கிறிஸ்துவின் நாமத்தில், கிறிஸ்தவர்கள் எந்த இடத்தில் கூடினாலும் அங்கு அவர் பிரசன்னமாகிறார்.

உங்கள் இரட்சிப்பிற்கு நீங்களே உத்திரவாதி.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக