திங்கள், 29 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 29 Mar 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

அபிஷேகிக்கபட்ட கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மத். 26:7ன்படி, ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் *சிரசின்மேல்* ஊற்றினாள் என்றிருக்கிறது.

ஆனால்
யோ. 12:3ல் மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் *பாதங்களில் பூசினாள்*, என்று பார்க்கிறோம்.

வேதாகமத்தை படிக்கும் போது, முன்னும் பின்னும் படிக்கவேண்டும் என்று சொல்வது இதனால் தான்...

இந்த அவசர உலகத்தில் எவருக்கும் நேரம் இல்லாமல்,
வேகவேகமாக படித்து விட்டு, இதுவும் அதுவும் ஒன்று தான் என்று ஓங்கி பிரசங்கமும் செய்து விடுகிறார்கள்.

முதல் சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *2 நாளைக்கு முன்னர்* நடந்தது. (மத். 26:2)

இரண்டாவது சம்பவம் – கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு *6 நாளைக்கு முன்னர்* நடந்தது. (யோ. 12:1)

தேவனுடைய வார்த்தையை தியானிக்கும்படி, அநுதினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பத்து வசனம் படித்தாலும், ஆழமாக அதை உணர்ந்து அசைபோட்டு ஜீரணிக்கும்படி படிக்க தேறுவோம்..

அந்த நேரத்தின் நிமித்தம் வாழ்க்கையில் தேவன் நிச்சயம் கனப்படுத்துவார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக