*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
துதிக்கு பாத்திரரான நம் பரம பிதாவிற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக.
தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக எப்போதும் நடந்து கொள்ளவேண்டும் என்றே மனிதன் படைக்கப்பட்டதும், பூமியில் பலுகி பெருக வேண்டும் என்பதன் நோக்கம். அது அவர் நமக்களித்த கிருபை.
ஆனால், அந்த நோக்கத்தை மறந்து, “தன்” வாழ்வு சுகமாய் இருக்க வேண்டுமென்று எப்போதும் சுய நலனிலேயே அக்கறையாய் இருப்பது தேவனுடைய சித்தத்திற்கு முரணானது. சில வசனங்கள் கீழே :
ஏசா. 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்.
ஏசா. 60:21 உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்.
1கொரி. 10:31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
நம் பேச்சும், நடக்கையும், செயல்களும், எண்ணங்களும் சொந்த லாபத்தை விட தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துவதாய் இருக்கிறதா என்று யோசித்து செயல்படுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக