செவ்வாய், 23 மார்ச், 2021

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 23 Mar 2021

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

by : Eddy Joel Silsbee

 

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

அந்த கனியை புசிக்க வேண்டாம் என்று ஆதாமிடத்தில் தேவன் சொன்னார். அப்போது ஏவாள் உருவாக்கப்ட்டிருக்கவேயில்லை. (ஆதி. 2:15-18)

 

தான் மீறின போதோ *ஏவாள் மீது பழியைப்போட்டார்* ஆதாம். (ஆதி. 3:12)

 

ஏவாளிடத்தில் விசாரித்தப் போதோ – சர்ப்பம் மீது பழியை போட்டார். (ஆதி. 3:13)

 

தன்னை கவனிக்காமல் மற்றவர் மீது பழியை போடுவது, தொடக்கத்திலிருந்தே பிசாசு திணித்த ஒரு குணம்.

 

ஆரம்பத்தில் தேவனோடு அன்பாகவும், நேரடியாகவும், நண்பனாகவும் உறவாய் பழகின ஆதாம், இப்போது – நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து மறைந்து கொள்கிறார் !!  (ஆதி. 3:10)

 

இரட்சிக்கப்பட்ட நாமோ பிதாவின் அன்பை ருசிபார்க்கவும், கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்கவும் தைரியமாய் கிருபாசனத்தண்டை சேருவோம். எபி. 4:16

 

கிறிஸ்துவானவர் தன் சகல முக்கியத்துவத்தையும் பிதாவிற்கு கொடுத்தார் என்பதை அறியவேண்டும்.

 

தலைமைத்துவம் கிறிஸ்துவோடு நின்றுவிடுவதல்ல. இறுதியாக அனைத்து மகிமையும் தேவனாகிய பிதாவிற்கே என்பதை நாம் நினைவில் வைத்து எப்போதும் நம் துதிகளும் ஸ்தோத்திரங்களும் பிதாவிற்கு செலுத்த கடமைப்படுகிறோம்.  யோ. 16:28, 1 கொரி. 15:28, 1கொரி. 3:23, 1கொரி. 11:3

 

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. பிலே. 3

 

(You may ask for English Version, if required)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,

+91 8144 77 6229

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr  

 

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :

https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக