*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
புதிய வாழ்வளிக்கும் நாதர் இயேசுவின் நாமத்திற்கு துதியும் ஸ்தோத்திரங்களும் உண்டாவதாக.
அப்பாவும், அம்மாவும், பாட்டியும், தாத்தாவும், கோத்திரமனைத்தும் கிறிஸ்தவராயிருந்தாலும் தங்கள் சொந்த ஆத்தும இரட்சிப்பிற்காக அவரவர் திருமுழுக்கு எடுக்க வேண்டிய அவசியமுள்ளது.
பாரம்பரியத்தைக் காட்டியோ, பரம்பரையைக் காட்டியோ – பரலோகக் கதவு திறப்பதில்லை.. !!
அதெப்படி நீ சொல்லலாம் என்று என்னிடம் சண்டைக்கு வந்தவர்களுண்டு !! நான் அல்ல, வேதம் அப்படியாக சொல்கிறது...
யோ. 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
யோ. 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோ. 1:13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
1யோ. 5:18 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். கலா. 6:15
மோட்சக் கதவு திறக்காத பட்சத்தில், பூமிக்குத் திரும்பி வரவும் முடியாது. அங்கு யாரிடத்திலும் விவாதம் பண்ணவும் முடியாது. வீம்பு சொல்பவர்களை பாராதபடிக்கு, வேதத்திற்கு கீழ்ப்படிவதே உகந்தது.
இன்றே தீர்மானியுங்கள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
ஞாயிறு, 21 மார்ச், 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 21 Mar 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக