*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
உண்மையையே எப்போதும் விரும்பும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தவறு செய்யவேண்டும் என்று எப்போதும் நம் சமாதானத்தை குலைக்க முயற்சி செய்வான் பிசாசு.
வாழ்க்கையோ, ஊழியத்திலோ,
சமுதாய சூழ்நிலைகளால் ஒருபோதும்,
கிறிஸ்தவர்களாகிய நாம் பாதை மாறக் கூடாது.
உலகம் உண்டானது முதற்கொண்டு,
எந்த காலத்திலேயும்,
உலகமானது *தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாகவே இருந்தது* என்பதை நினைவில் இருந்தால்,
கிறிஸ்துவின் வருகை வரை இந்த உபத்திரவம் இருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
கிறிஸ்தவர்களை காப்பாற்றவும்,
சட்டமன்றத்திலேயும், நாடாளுமன்றத்திலேயும் குரல் கொடுக்கவும், அரசியல் ரீதியாக போராடுகிறோம் என்று எத்தனை பேர் முன்வந்தாலும்,
உண்மை கிறிஸ்தவர்களுக்கு உலகம் எதிராகவே இருக்கும். 1யோ.3:13, மத். 10:22.
அரசியல் ரீதியாக போராடவேண்டும் என்றிருந்தால், கிறிஸ்து ஒரு கட்சியை துவங்கியிருப்பார். யோ. 18:36
எந்த கிறிஸ்தவனும்,
மாநில அரசின் சட்டத்திற்கும்,
மத்திய அரசின் சட்டத்திற்கும்,
கட்டுப்பட்டு கீழ்படிந்து நடக்கவேண்டியது அவசியம் என்று வேதம் நமக்கு வலியுறுத்துகிறது. 1பேதுரு 2:14
ஏனென்றால் நாம், மாநில, மத்திய அரசாங்கத்தையும், உலக இராஜ்யத்தையும் கடந்து பரலோக இராஜ்யத்தின் பிரஜைகள். ஆகவே, மற்றவரைக்காட்டிலும் சட்டத்திற்கு கீழ்படிதலில் நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டியது அவசியம். அதற்கான தகுதியை நிரூபிக்க எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். பிலி. 4:5
உலகத்தாருக்குள் கைக்கோர்த்துக் கொண்டு, சகல சமாதானத்தையும் நாடவிரும்புபவரை தேவன் வேறு விதமாக பார்க்கிறார். யாக். 4:4
இது புதுமை அல்ல.. நீதிமான்களின் இரட்சிப்பு தேவனுக்கு மகிமை.
முடிவு பரியந்தம் நிலை நிற்கவேண்டியது நம்முடைய அழைப்பு!!
சங். 143:9 கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக