புதன், 17 மார்ச், 2021

#1086 - வயதில் மூத்த பெண்ணை மணக்கலாமா?

#1086 - *வயதில் மூத்த பெண்ணை மணக்கலாமா?*

*பதில்* : ஆதாம் உருவாக்கப்பட்ட பின் ஏவாள் உருவாக்கப்படுகிறாள். ஆதி. 2:7, 15, 18.  

இருவரும் ஒரே வயதிலுள்ளவர் என்பதை நாம் யூகிக்கமுடியும்.

தன் மனைவி சாராளைக் காட்டிலும் 10 வயது மூத்தவராக ஆபிரகாம் இருந்தார். ஆதி. 17:17

அதீத வயது வித்தியாசத்தில் மணந்த அபிஷாக்கு ஒரு கணவனாக தாவீது எதையும் பூர்த்திசெய்ய முடியவில்லை. 1இரா.1:1-4

ஒரு பெண்ணின் பாலியல் ஆசைகள் 20 முதல் 35 வயது வரையிலும், ஆண் 35 மற்றும் அதற்குப் பிறகும் என்று மருத்துவம் சொல்கிறது. சரியான வயது இதுவும் ஒரு காரணம்.

பெண்கள், ஆண்களை விட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் முன்னரே முதிர்ச்சியடைகிறார்கள். அதேபோல் அவர்கள் மாதவிடாய் நிறுத்தத்தையும் அதனுள் அடைகிறார்கள். ஆகவே, ஒரு ஆண், தான் மணக்கவிருக்கும் பெண்ணை விட வயது மூப்பில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாரம்பரிய ஏற்றுக்கொள்ளல் மற்றும் மருத்துவ ரீதியிலும் கொண்டுள்ளது.

இருந்தபோதும், “வயது என்பது ஒரு எண்” என்றும் மன முதிர்ச்சி, அன்பு, புரிதல் மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இருக்கும்போது வயது இடைவெளி ஒரு பொருட்டல்ல என்று சொல்பவரும் உண்டு.

வெவ்வேறு தம்பதிகளுக்கு வெவ்வேறு வயது இடைவெளிகள் வித்தியாசமாக வேலை செய்கின்றன. ஒரு விதியாக இது இருக்க முடியாது.

பரந்த வயது இடைவெளி திருமணங்களில், சிறிது காலம் கழித்து உண்மை நிலைமையானது கடுமையாகத் தாக்கும். ஆரம்ப கால ஆசைத்தீப்பொறிகள்  மங்கக்கூடும். இத்தகைய திருமணங்கள் வேகமாகப் முறிந்து செல்கின்றன.

குடும்பம் என்பது கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து எடுத்துச்செல்வது. அதற்கு இருவரது புரிதலும், மனப்பக்குவமும், முதிர்ச்சியும் ஒரு சேர ஒரே அளவில் இருந்தாலன்றி அவர்கள் ஏற்றெடுக்கும் நுகம் கடினமாக இருக்கும். 1 கொரி. 7:3

வயதில் அதிகமான வித்தியாசமுள்ள மூத்த / இளைய பெண்ணை ஒரு ஆண் மணக்கும் போது ஆரம்ப கால வாழ்க்கை தங்களுக்குள் எந்த விதமான சமாதானத்தை சொல்லிக் கொண்டாலும், பிற்காலங்களில் நடைமுறை வாழ்க்கையில் அது நிச்சயம் அதே அளவிற்கு பிரிவையும் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1இரா. 1:1-4-ல் காணும் அபிஷா – தாவீது நமக்கு மிகப்பெரிய உதாரணம்.

ஆகவே, இருவரும் அதிக வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பது நடைமுறைக்கு ஏற்றது.

வேதாகமத்தில் திருமண வயது வித்தியாசத்தைக் குறித்த எந்த வரையறையும் காணவில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக