#1087 - *தன் இனத்தில்தான் பெண்ணோ, ஆணோ கொள்ளவேண்டும் என்று பைபிள் போதிக்கிறதா? அப்படிச் செய்பவர்கள் ஆபிரகாமை முன்வைத்து காரணம் சொல்லுகிறார்கள். ஏன் இன்னும் சொல்லப்போனால் தங்களை உலகம்போற்றும் பிரசங்கிமார்கள், தீர்க்கதரிசிகள், ஊழியக்காரர்கள் என்று கூறுபவர்கள்கூட அந்தப்படி தன் இனத்தாரிடத்திலும், மிகுந்த செல்வாக்குள்ளவர்களிடமே கொடுக்கல், வாங்கல் செய்துள்ளனர். கிறிஸ்தவம் சாதிகளின் அடிப்படையைக் கொண்டதுதானா*? விளக்கவும்
*பதில்* : திருமணத்தைக் குறித்து மிக விஸ்தாரமாக வேதம் விவரிக்கிறது. ஆதாமின் விலா எலும்பினால் ஏவாள் உருவாக்கப்படுகிறார். ஆதி. 2:21-23
ஆதி பெற்றோர் ஆதாம்-ஏவாளின் பிள்ளைகளாகிய காயீன் மற்றும் சேத்திற்கு அவரவர் மனைவியானவள் அவர்களது சொந்த பெற்றோர் வயிற்றில் பிறந்த தங்கை. ஆதி. 5:3-4
அதன் பின்னர் வரும் சந்ததியினருக்கு தங்களது ஆண்களுக்கு பெண் கொள்ள நிறைய உறவுகள் பரந்து விரிந்திருந்தது.
ஆபிராம் தன் தந்தையின் இன்னொரு மனைவியின் குமாரத்தியாகிய சாராயை மணந்தார். ஆதி. 20:12
ஆபிராம், தான் இருக்கும் கானானியரிடத்தில் தன் மகன் ஈசாக்கிற்கு பெண் கொள்ளாமல், தன் இனத்தாரில் பெண் கொள்ளவேண்டும் என்று மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊருக்கு அனுப்பிவைத்ததன் காரணம்; கானானியர் விக்கிரகாராதனைக்காரராக இருந்ததே. ஆதி. 24:10; 28:8, யாத். 23:23; எண். 33:52-53; உபா. 20:16-17
அதுபோலவே, ஈசாக்கும், தன் மகன் யாக்கோபுவிற்கு அப்படிப்பட்ட விக்கிரக ஆராதனைக்காரர்களான கானானியர்களில் பெண் கொள்ளாமல் இருக்கும்படி எச்சரித்து வெளியே அனுப்பிவைத்தார். ஆதி. 28:1-2
சிம்சோன், தன் பெற்றோரின் ஆலோசனையை தள்ளி, தேவஜனமில்லாத அந்நியரின் மத்தியில் பெண் கொண்டதால், வீழ்ந்தார். நியா. 14:3
மீகாளை திருமணம் செய்த தாவீது, தேவனால் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரவேலின் முதல் இராஜாவாகிய சவுலின் குமாரத்தி. 1சாமு. 18:20-21
திருமணத்தில் இணையும் இருவரும் ஒரே மாம்சமாகிறார்கள். ஆதி. 2:24
ஆகவே, கருத்துக்களும், எண்ணங்களும், தீர்மானங்களும், புரிதலும், ஒன்றாக இல்லாதபட்சத்தில் திருமண வாழ்க்கை கடினமாகும்.
ஜாதி என்ற பாகுபாடு கிறிஸ்தவத்தில் இல்லை. எபே. 2:14-18
அப்படியாக, ஜாதி பார்த்து திருமணம் செய்கிறவர்கள் வேதத்தின்படி கிறிஸ்தவர்கள் அல்ல.
கிறிஸ்தவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் சரீரத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டவர்களாயிற்றே. ஒரே சரீரத்தில் இணைக்கப்பட்டிருந்தால், பாகுபாடு எங்கிருந்து வருகிறது? ரோ. 12:5
பாகுபாட்டை காண்பிப்பவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கம் வகிக்காதவர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர்கள் கிறிஸ்துவின் நாமத்தையே தூஷிக்கிறவர்கள். யாக். 2:1-7
செல்வாக்கைத் தேடி திருமணம் செய்பவர்கள் தங்கள் உள்மனதை வெளியரங்கமாக காண்பிக்கிற செயல்.
அந்நிய நுகத்துடன் பிணைக்கப்படக்கூடாதென்ற ஒரு வரையறையை மாத்திரமே வேதத்தில் காணமுடியும். 2கொரி. 6:14
மற்ற அனைத்து சம்பிரதாயங்களும், மனிதர்களின் சொந்த மனவிருப்பத்தையே காண்பிக்கிறது. வேதத்திற்கும் இவர்களது கொள்கைக்கும் சம்பந்தமில்லை.
எந்த தேசத்தாரானாலும், இனத்தாரானாலும், கருப்போ, சிவப்போ, சௌந்தரியமோ, செழிப்போ, ஏழ்மையோ, வருத்தமோ, வியாதியுற்றவரோ, சரீர குறைபாடுள்ளவரோ எவராயினும் - தன் கட்டளைக்கு கீழ்படிந்து வரும்போது, அவர்களை தன் சரீரத்தில் ஒன்றிணைத்த தேவகுமாரனுடைய அன்பை நாம் என்ன சொல்வது?

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக