*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
மகிழ்ச்சியாய் நம்மை நடத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
*கவனிக்கவேண்டிய ஒன்று* !!
சகல வசதியும், செழிப்பும், *ஏதேன் தோட்டத்தை போல* இந்த 2 பட்டணங்களுக்கும் ஆண்டவர் கிருபை பாராட்டினார் என்று வேதம் சொல்கிறது !! ஆதி 13:10
ஆனால், எல்லா அநியாயங்களும், புரட்டுகளும், பித்தலாட்டமும், வயது வித்தியாசம் பாராமல் விபசாரமும், வேசித்தனமும், *மனித மாமிசம் அல்லாத அந்நிய மாம்சத்தைக்கூட விடமுடியாத காமம்*, ஊரில் 10 பேர் கூட உத்தமன் இல்லாமல் போகும் அளவிற்கு பாவம் பெருகி போனது (ஆதி 18:20, யூதா 1:7)…. முடிவு ? அழிக்கப்பட்டார்கள் !!
கிறிஸ்துவின் உபதேசத்தை அறியாமல்,
சொந்த திறனால் தன் வழிக்கு இழுத்து,
தேவன் சொன்னார் என்று தன் விருப்பத்தை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சொல்லி,
காலாவதியான பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பயன்படுத்தி பண இலாபம் ஈட்டும் ஊழியங்கள், சுய நலம், அன்பின்மை, ஏற்றத்தாழ்வு, பொறுமையின்மை என்று இப்படிப்பட்ட காரியங்களை சோதோம் கொமோராவை மிஞ்சும் அளவிற்கு வெகுவாக இக்காலங்களில் பார்க்க முடிகிறது...!!
போதாகுறைக்கு இந்த பட்டியலில் இது வரை நம் சமுதாயம் பாராத அளவிற்கு, வேதம் தடை செய்த பாலினத்தவரின் மேடை ஆதிக்கங்களும் பெருகி போனது. 1கொரி 14:35
ஜெபம் என்கிற பெயரில், செய்ய வேண்டிய கடமைகளை மறந்து,
பட்டங்களும், கவுரவ பதவிகளும், பெருமைகளும், வேஷங்களும், அங்கீகார தேடலும், கிறிஸ்தவ மதங்களும் பெருகி விட்டது.
சமுதாயத்திற்காக மாத்திரம் அல்ல,
கிறிஸ்தவ மதம் முதலாவது இரட்சிக்கப்பட்டு, மதத்தை விட்டு மார்க்கத்திற்கு / கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிய முழங்காலில் நிற்க தவற வேண்டாம்.
நம்முடைய பிற்கால சந்ததியும் ஆசீர்வதிக்கப்படவேண்டும். சங் 32:8, மத் 7:21
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
Q&A Biblical Book ஆர்டர் செய்ய :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக