தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்து 40 நாள் இரவும் பகலும் *ஒன்றுமே சாப்பிடாதிருந்தார்* (லூக். 4:2)
எந்த மனிதனாலும், மூன்று அல்லது மிஞ்சினால் 4 நாட்களுக்கு மேல் எதையாவது வாயினுள் உட்கொள்ளாமல் (தண்ணீரோ, ஆகாரமோ) இருக்கவே முடியாது. படுத்த படுக்கையாகி போவார்கள்.
இயேசுவை போல நாங்களும் 40 நாள் உபவாசம் (fasting) இருக்கிறோம் என்ற பெயரில் :
ஜூஸ் மாத்திரம் குடித்து கொள்வது,
பால் மாத்திரம் குடித்து கொள்வது, அல்லது
ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டு கொள்வது என்று 40 நாளை கழிக்க தீர்மானிக்கிறார்கள்.
அப்படி இருப்பது உபவாசம் அல்ல - ஏதாவது ஒரு நோக்கத்திற்காக *தன்னை ஒடுக்கி கொள்வது* தான்.
இயேசுவைப் போல 40 நாள் உபவாசம் என்பது எவராலும் முடியாத காரியம்.
தன் போதனைகளைய கடை பிடிக்க சொன்னார் கிறிஸ்து !!
அதைவிட்டு,
அவரை போல 40நாள் உபவாசம் இருக்கவோ,
சிலுவையில் அவரை போல அறைந்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளவோ சொல்லவில்லை.
பெரிதான பதாகைகளை அடித்து
உபவாச ஜெபம்,
உபவாச மேளா,
உபவாச ஆராதனை என்று விளம்பர படுத்த வேதம் அனுமதிக்கவில்லை.
அவரவர் தேவைக்கு மேற்கொள்ளும் உபவாசம் *மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உங்கள் பிதாவுக்கே காணப்படும்படியாக, தலைக்கு எண்ணெய் பூசி, முகத்தைக் கழுவி உற்சாகமாய் இருங்கள்*.
*அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உங்கள் பிதா வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்*. (மத் 6:17-18)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக