*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
எண்ணி முடியாத நம்முடைய தேவனின் நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக..
இக்காலங்களில் பலர், யெகோவா ஷம்மா, யெகோவா ரூவா,
யெகோவா சிட்கேனு என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்.. இவை தேவனுடைய பெயர்கள் அல்ல, அது அவருடைய தன்மை என்பதை கடந்த 20 நாட்களாக ஒவ்வொன்றாய் அறிந்தோம்.
பெரியவர் சிறியவருக்கு பெயர் வைப்பார்கள் (எபி. 7:7). நமக்கு பெற்றோர் பெயர் வைத்தார்கள். சமுதாயம் பட்டபெயரிலும் அழைக்கும்.
பிதாவாகிய தேவனுக்கு மேலே எவரும் இல்லை... அவருக்கு யார் பெயர் சூட்டுவது? ஆகவே, அவர் மோசேயிடம் ”நானே நான்” என்றார்.. தமிழ் வேதாகமத்தில் மொழிபெயர்த்தபடி “இருக்கிறவராகவே இருக்கிறேன்”.
ஆங்கிலத்தில் அழகாக இருக்கும்... I'm who I'm.
ஆகவே, தேவனுடைய தன்மையை பெயர்களாக அழைத்தார்கள். இவைகள் மனனம் செய்வதற்கல்ல.. அந்த வார்த்தைகளுக்கும், தமிழ் அர்த்தத்திற்கும், தேவனுடைய தன்மைக்கும் உள்ள தொடர்பை அறியவே. பின்வரும் சந்ததிக்கு எழுதி வைப்பது நம் கடமை. அவருடைய தன்மைக்கு யார் பட்டியலிடமுடியும்? அதற்கு முடிவு இல்லையே…ஆகவே, இப்பட்டியில் நேற்றோடு முடிந்தது.
ஒரு நாள், ஒரு சாலையில் அநேக பெண்கள் தங்கள் நெற்றியில் சாம்பல் பூசி இருப்பதை கவனித்தேன். இரவு முழுவதும் அவர்களுக்கென்று பிரத்யேக பூஜை முடிந்து தங்கள் சாமியை தரிசித்து காலையில் வீட்டிற்கு போய்க்கொண்டிருக்கிறார்கள் போலும்.
அது ஒருபுறம் இருக்க - சில கிறிஸ்தவ மதப்பிரிவினர் வருடா வருடம் மேலே கூறிய நாளை ஒட்டி தங்கள் சார்பாக *சாம்பல் புதன்* என்று மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் அனுப்பிகொண்டிருப்பதையும் கவனிக்க நேர்ந்தது !
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் - ஊரோடு ஒத்துபோக வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவம் என்கிற பெயரில் பக்கவாட்டில் ஜனங்களை திருப்பி வேதத்திற்கு புறம்பாக்கி பரலோக வாசலை மறைக்கும் முயற்சியில் இவர்கள் வெற்றிக்காண முயற்சிக்கிறார்கள்.. தாங்கள் பலப்பட்டு தேவனை மறந்த இஸ்ரவேலர் தான் ஞாபகம் வந்தது (2 நாளா 12:1).
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் ... லூக் 13:24
புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்களுக்கென்று சொல்லப்படாத எந்த பழக்கத்திற்கும் விலகியிருப்போம்.
சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ரோ15:33
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* : https://wp.me/pbU5iQ-1dK

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக