#1073- *வனாந்திரத்தில், இஸ்ரவேலர்களுக்கு ஏராளமான தங்களுடைய சொந்த ஆடு மாடுகள் இருந்தபோதும், இறைச்சிக்கு காடையை பெறவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?*
*பதில்* : தேசமே மரண கூக்குரலில் இருந்ததால், இஸ்ரவேவர்கள் கேட்ட அனைத்தையும் தந்து விரட்டிவிட்டார்கள். ஆகவே, வழிபிரயாணத்திற்கென்று அவர்கள் எதையும் முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் (யாத். 12:39) கண்களில் அகப்பட்ட அனைத்தையும் ஆடு மாடுகள் மாத்திரமல்லாமல் பிசைந்து வைத்த மாவையும் கொண்டு சென்றார்கள். யாத். 12:31-34, 38.
இந்த கேள்விக்கான நேரடியான வசன ஆதாரம் வேதாகமத்தில் என்னால் காணமுடியவில்லையென்றாலும், இஸ்ரவேலரின் முறுமுறுப்பை கவனிக்கும் போது யூகிப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது.
அதனடிப்படையில், கீழ்வரும் சில அநுமானங்களை இங்கு முன்வைக்கமுடியும்:
மேலும், யாத். 16ம் அதிகாரத்தின் சம்பவம், இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு புறப்பட்டு சுமார் 45வது நாளில் நடைபெறுகிறது. (யாத். 16:1)
ஆகவே, வெகு விரைவில் தங்கள் புதிய இடத்திற்கு சென்று புதிய தொழில் துவங்கி சுகமாய் வாழலாம் என்ற எண்ணத்தில் தங்களில் சார்ந்த கால்நடைகளை சமைத்து சாப்பிடாமல் இருந்திருக்கலாம்.
அல்லது, தாங்கள் அன்பாய் வளர்த்தவைகளை அடித்து சாப்பிட மனமில்லாமல் இருந்திருக்கலாம். யாத். 17:3
அல்லது, தேவனுக்கு பலியிடும்படியாக அவைகளை கொல்லாமல் இருந்திருக்கலாம். யாத். 3:18
அல்லது, சொந்த சொத்துக்களை ஏன் அழித்து சாப்பிடவேண்டும், நமக்கு வேண்டியதை தேவனே தரட்டும் என்ற எண்ணத்திலும் இருந்திருக்கலாம். யாத். 32:8, 16:3, எண். 14:2
அல்லது, கடந்த 45 நாட்களில் அவர்கள் முடிந்த அளவிற்கு அடித்து சாப்பிட்டதால், இனியும் எத்தனை காலம் ஆகுமோ என்றறியாததால், மேற்கொண்டு தங்களது கால்நடைகளை கொல்வதற்கு மனமில்லாமலும் இருந்திருக்கலாம்.
அல்லது, பல வருடங்களுக்கு பிற்பாடு வெங்காயமும், கீரையும் சாப்பிட ஆசைப்பட்டது போல, 45வது நாளிலேயே தங்கள் சொந்த கால்நடைகளை சாப்பிட்டு ருசி மரத்து போய் வேறே இறைச்சியை தேடியிருக்கலாம். எண். 11:5
இந்த இஸ்ரவேலரின் பேராசையைக்குறித்த இருதயத்தை இன்னுமொரு முக்கிய தகவலின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.
இஸ்ரவேலர்கள் மாத்திரமல்லாமல் அவர்கள் மத்தியில் இருந்த புறஜாதியினரும் சேர்ந்துகொண்டு தங்களுக்கு இறைச்சி வேண்டும் என்று அழுகிறார்கள். எண். 11:4
எகிப்தில் நாங்கள் சுதந்திரமாக சாப்பிட்ட மீன்கள், வெள்ளரிகள், முலாம்பழம்கள், கீரைகள், வெங்காயம், பூண்டு ஆகியவை அவர்கள் நினைவில் வந்து வாட்டுகிறது. எண். 11: 4-6
மன்னா என்ற உசிதமான ஆகாரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் ஆகின்றன.
காலை, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு மன்னா தான் அவர்களுக்கு !!
என்ன சாப்பிட ஆசைப்பட்டாலும் அது மன்னாவினால் செய்யப்படவேண்டும் !!
கடந்த இரண்டு வருடங்களாக வேறு எதையும் சாப்பிடமுடியாமல், மன்னாவினால் இவர்கள் சலித்துப்போனார்கள்.
ஆகவே, அவர்கள் இறைச்சி மற்றும் காய்கறிகளை விரும்பினர்.
தேவன், அந்த மக்களுக்கு விரும்பியதைக் கொடுத்தார்.
இஸ்ரவேலரின் பாளையம் சிறியதல்ல. இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு பாளையம் என்றால், அது ஒரு பெரிய நகரமாகவே காட்சியளித்திருக்கும்.
அந்த முகாமைச் சுற்றிலும், குறைந்தபட்சம் 10 மைல்கள் துவங்கி 30 மைல்கள் இருக்க வாய்ப்புள்ள அந்தப் பகுதியை காடைகளால் நிரப்பினார். மூன்று அடி ஆழத்திற்கு!
வசனத்தை வாசிக்கவும் எண்ணாகமம் 11:18-32
"நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல,ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், *தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது*.
அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று *பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்*.
1- தரையின் மேல் 2முழ உயரம் என்றால் = தரையிலிருந்து சுமார் மூன்று அடி அல்லது ஒரு மீட்டர் அல்லது இடுப்பு அளவிற்கு காடைகளை தேவன் குவித்தார்.
2- இரண்டு நாட்களாக அந்தக் காடைகளை சேகரிக்கிறார்கள். எண். 11:32
3- காடைகளை சேகரித்தவர்களில் “குறைவாய்” சேகரித்தவன் = பத்து ஓமர் அளவு. அதாவது, *இலகுவாக புரியும்படி மனக்கணக்கில் சொல்வதென்றால், குறைந்தபட்சமாக சேர்த்தவனே 1,900 காடைகளை சேகரித்து கொண்டானாம்* !! சுமார் 215 கிலோ எடை !!
தேவன் மீது அவ்வளவு அவநம்பிக்கை… ?
தாங்கள் சேர்த்தவைகளை பாளையம் முழுக்க சுற்றி குவித்து வைத்தார்களாம். எண். 11:32
அவர்களது அவநம்பிக்கையும், இச்சையும், அதீத ஆசையையும் தேவன் கண்டு கோபமடைந்ததால், அந்த காடைகள் அவர்கள் வாயில் பல்லுகளுக்கு இடையில் இருக்கும்போதே அவர்களை வியாதி பற்றினது என்றறிகிறோம். எண். 11:33

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக