செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

#1067- பலமுறை காலண்டர் மாற்றப்பட்டதால் வேதத்தின்படியுள்ள சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தான் நாம் இருக்கிறோமா?

#1067- `*பலமுறை காலண்டர் மாற்றப்பட்டதால் வேதத்தின்படியுள்ள சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தான் நாம் இருக்கிறோமா?*

*பதில்* : அனைவரும் இலகுவாக புரிந்துக்கொள்ளும் படி முழு வரலாறை எழுதாமல்  இரத்தின சுருக்கமாக எழுதுகிறேன்.

இந்த பூமியில்  இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில், பயன்பாட்டில் இருந்தது ஜூலியன் காலண்டர்.

யூதர்கள் கடைபிடித்த ஓய்வு நாள் என்று சொல்லப்படுவது வாரத்தின் ஏழாம் நாளாகிய "சனிக்கிழமை".

இது சுவிசேஷங்களில் காட்டப்பட்டுள்ளதாகையால், இயேசு கிறிஸ்துவின்  காலத்திற்கு முந்தைய காலெண்டர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

ஜூலியன் காலண்டர் அடுத்த 1,500 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதில் ஒரு குறைபாடு இருந்தது. என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் பதினைந்து நிமிடங்கள் குறுகியதாக இருந்தது.

ஆகவே, 1582-ஆம் ஆண்டு காலத்தில், பூமியின் சுழற்சியில் இருந்து 10 நாட்களுக்குள் காலண்டர் முடக்கப்பட்டது.

போப் கிரிகோரி காலெண்டரை மாற்றும் பிரகடனத்தை வெளியிட்டார்.
அக்டோபர் 4, 1582, வியாழக்கிழமையானது,
வெள்ளிக்கிழமை அக்டோபர் 15, 1582 ஐத் தொடர்ந்து வந்தது.  (அக்டோபர்-க்கு பதில் செப்டம்பர் என்று சில சரித்திர வலைதளங்கள் சொன்னாலும் கிழமையில் மாற்றம் இல்லை)

வேறுவிதமாகக் கூறினால், அந்த “நாளுக்கு” ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை மாற்றப்பட்டதேயன்றி “வார நாட்களின்” வார சுழற்சி குறுக்கிடப்படவில்லை.

இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752-இல் கிரிகோரியன் நாட்காட்டியாக மாற்றப்பட்டன.

இது தற்போது உலகளவில் பயன்படுத்தப்படும் காலெண்டராகும்

ஆகையால், இயேசு கிறிஸ்துவின் நாளில் இருந்த ஏழு நாட்களின் அதே சுழற்சி தான் இப்போதும் நம்மிடம் உள்ளது.

ஆதாரங்கள் கீழே.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://wp.me/pbU5iQ-1dK 
 
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*--*--*--*--*--*--*--*--

ஆதாரம் :
1- https://worldview.stratfor.com/article/geopolitics-gregorian-calendar
2- https://www.timeanddate.com/calendar/julian-gregorian-switch.html#:~:text=Its%20predecessor%2C%20the%20Julian%20Calendar,known%20as%20a%20tropical%20year.
3- https://www.britannica.com/science/Julian-calendar

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக