
*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
பூரண சகாயராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்து பிறந்ததும், அவரைக் கொலை செய்ய பிசாசு முயற்சித்தான். மத். 2:13-16
ஊழியத்திற்கு தயாராகும் போது எப்படியாவது வீழ்த்திவிடலாம் என்று மூன்று முறை முயன்று பார்த்தான். மத். 3:16 - 4:11
ஊழியத்தையாவது எப்படியும் தடுத்து விடலாம் என்று அநுதினமும் அநேகரைக் கொண்டு நெருக்கடி கொடுத்தான். மத். 22:15, லூக். 20:20
பிதாவின் சித்தம் நிறைவேறாமல் இருக்கும்படியாக, இயேசு கிறிஸ்துவானவர், சிலுவையில் தொங்கும் வேளையில் கூட, நீ உண்மையாகவே தேவனுடைய குமாரன் என்றால் சிலுவையை விட்டு இறங்கி நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்தான் பிசாசு. மத். 27:40, 26:39, மாற்கு 14:36
பச்சை மரமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவையே இந்த அளவிற்கு சோதித்து முயற்சித்தவன், பட்ட மரமாகிய நம்மை சும்மா விட்டு விடுவானோ? லூக். 23:31
ஒரு ஆத்துமா அல்லது ஒரு விசுவாசி விசுவாசத்தை விட்டு விழுந்தால் – சாத்தானுக்கு அது ஒரே ஒரு (1) எண்ணிக்கை தான் !
ஆனால் ஒரு ஊழியன் விழுந்தால் – அது பல எண்ணிக்கைக்கு சமம் !
ஆகவே, விசுவாசிகளை விட உத்தமமாக சத்தியத்தின்படி தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு அதிகமான நெருக்கடிகள் உண்டு. 2கொரி. 1:4, 2தீமோ.3:12, 1 தெச. 3:3-4, 1பேது. 5:9-10; வெளி. 1:9-10, 7:14, 12:4, 12:7-10
உங்களுக்காக எப்போதும் ஊழியக்காரர்கள் ஜெபிக்கிறோம்...
ஆனால் ஊழியர்களுக்காக யார் இடைவெளியில் (திறப்பிலே) நிற்பது?
தன் பிரச்சனையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் கண்ணீரை தேவனிடத்தில் மாத்திரமே அந்தரங்கத்தில் ஊற்றுவர்களுக்காக சபையார் எப்போதும் ஜெபிக்கவேண்டும்.
தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று அப்போஸ்தலர் சபையாரிடம் கூறினர் (2தெச 3:2, ரோம 15:31-32, 1 கொரி 15:32)
உங்களது ஜெபமே எங்கள் ஜெயம்.
நம் அனைவரையும் தேவன் தாமே சகலத்திற்கும் பலன் தந்து ஜெயமாய் ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக