*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
உபத்திரவத்தின் மத்தியிலும் நம்மை பெலப்படுத்தும் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
சத்தியத்தை பற்றிக்கொண்டு,
உத்தமமாய் இருந்த யோபுவின் மீது பிசாசு கண் வைத்தான்.
பிள்ளைகள்,
சொத்துக்கள்,
வேலையாட்கள்,
மிருகஜீவன்கள் என்று அனைத்தையும் *ஒரே நேரத்தில் அடுத்தடுத்து* யோபு இழந்தார். *பேசிக்கொண்டிருக்கயில் …* என்ற வார்த்தையை கவனிக்கவும். யோபு 1:13-19
சொந்த சரீரமும் அருவருக்கத்தக்க பருக்களால் நாசமானது. யோபு 2:7-8
மனைவியாவது அவனுக்கு ஆறுதலாய் இருந்திருக்கலாம்...
புருஷன் இனி பிரயோஜனம் இல்லை என்று நினைத்து விட்டாள் போலும்...
அவள் பங்கிற்கு யோபுவை பார்த்து *தேவனை சபித்துவிட்டு, செத்துப்போ* என்று சொல்லி யோபுவின் இருதயத்தில் ஈட்டியை பாய்ச்சினாள். யோபு 2:9
தேவனுக்கென்று நாம் வைராக்கியமாய் வாழும்போது,
நிந்தைகளும், அவமானங்களும் வேதனைகளும் வரும்.
கணவனும், மனைவியும் கூட நம்மை வெறுக்கலாம்.
ஆனால், உண்மையாய் இருப்பவர்களை ஒருபோதும் ஆண்டவர் வெட்கப்படுத்த மாட்டார்.
நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். (1பேது. 2:20)
விசுவாசத்தை விட்டு விடாதிருங்கள்.
நிச்சயம் தேவன் ஜெயத்தை தருவார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எமது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
சனி, 23 ஜனவரி, 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 23 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக