*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
எபேசியர் 4:4-7ல் சொல்லப்பட்ட ஒரே சரீரமும், ஒரே ஆவியும்; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் என்று மனனமாய் எப்போதும் உச்சரித்தாலும்... இன்னும் பலருக்கு அதில் திருப்தியில்லை..எபே. 4:4-6
தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்த பின்னரும்,
ஸ்பெஷலாக வானத்திலிருந்து நேரடியாக பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பலர் வலியுறுத்துகிறார்கள்.
அப்படியென்றால், வேதத்தின் படி அது இரண்டாவது ஞானஸ்நானம் ஆகிவிடாதோ? வேத வசனத்திற்கு முரணாக யோசிக்கிறோம் என்று ஏன் இவர்களின் நினைவில் வருவதில்லை?
தங்களின் கோட்பாடுகளின் படி வசனத்தை வளைத்துக்கொள்ளவும் அர்த்தஞ்சொல்லவும் முற்படுவது ஆபத்து.
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் அப்போஸ்தலருக்கு வாக்களிக்கப்பட்டது மாத்திரமல்ல, எருசலேமைவிட்டு வெளியே போகாமல் இருந்து அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையாக கொடுக்கப்பட்டது. அப். 1:4, 5
அப்போஸ்தலர் மூலமாகவே பரிசுத்த ஆவியானவர் பகிர்ந்தளிக்கப்பட்டார். அப்.10:44, 8:14-17, 19:6
இயேசு கிறிஸ்துவின் கட்டளைபடி நாம் பெற்றுக்கொள்வதும்,
நமக்கு கட்டளையாய் கொடுக்கப்பட்டதும் தண்ணீர் ஞானஸ்நானம் என்ற ஒரே ஞானஸ்நானம். மத். 28:19.
அது பாவமன்னிப்பிற்கென்று எடுக்கப்படவேண்டும். அப்.2:38, 22:16
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com/2021/01/q-biblical-book.html
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
சனி, 16 ஜனவரி, 2021
தினசரி சிந்தனைக்கான வேத துளி, 16 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக