*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சாந்தத்தின் ஆவியை நமக்கு கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
–பட படாவென்று எல்லாவற்றையும் கொட்டி தீர்க்கிறவர்கள், “நாங்க எங்க மனசுல எதுவுமே வச்சிக்க மாட்டோம்”, எங்கள் இருதயம் சுத்தம் என்றும்..
- ஒன்றுமே பேசாமல் இருப்பவர்களை, எப்போதுமே நம்ப கூடாது என்றும் உலகம் சொல்லுகிறது..
இந்த கூற்றுக்கு வேதம் சொலிகிற பதில் கீழே ஆச்சரியத்தை தரும்... !!
தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். நீதி. 21:23
சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். நீதி. 10:19
...வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். பிர. 5:3
மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான்... பிர. 10:14
... யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்... இருக்கக்கடவர்கள்; யாக். 1:19
அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். நீதி. 17:27
*உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்*.. யாக். 1:26
இவ்வளவு வசனங்கள் போதும் என்று நினைக்கிறேன்..
*படபடவென்று கொட்டி தீர்க்காமல் அளவாய் அவசியத்திற்கு பேசுவதே – சகலத்திலும் நன்மை*
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர் - உலக வேதாகம பள்ளி,
+91 8144 77 6229
https://joelsilsbee.wordpress.com/2021/01/13/qa-biblical-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3/
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*--*--*--*--*--*--*--*--
வியாழன், 14 ஜனவரி, 2021
*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 14 Jan 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக