சனி, 30 ஜனவரி, 2021

#1070- தாவீது ஏன் மக்கள் தொகை கணக்கெடுத்தார்?

#1070-  *தாவீது ஏன் மக்கள் தொகை கணக்கெடுத்தார்?* மக்கள் தொகை கணக்கெடுத்ததை ஏன் பாவமாக தாவீது கருதினார்? பாவம் செய்த தாவீதை அழிக்காமல் ஏன் ஜனங்களில் சிலரை அழித்தார்?  இந்த நிகழ்வை எப்படி தற்கால நிகழ்வோடு ஒப்பிட்டு சரி, தவறு என்று மக்களுக்கு கூறலாம்?

வசனம் : 2 சாமுவேல் 24:10=> இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது. அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினால் பெரிய பாவஞ்செய்தேன். இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும். நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.

*பதில்* :
*1. தாவீது ஏன் மக்கள் தொகை கணக்கெடுத்தார்*?
தன் இராணுவ பலத்தை அறிந்துக்கொள்ளும்படியாக இந்த கணக்கெடுப்பு நடந்தது. 2சாமு.24:3-4,9

*2.மக்கள் தொகை கணக்கெடுத்ததை ஏன் பாவமாக தாவீது கருதினார்*?
ஏன் இது பாவமாக தாவீது கருதினார் என்று துல்லியமாக சொல்லப்படவில்லை. இருந்தாலும் அனுமானிக்கும் சகல கருத்துக்களும் உள்ளது.

அநேகமாக தாவீது இப்போது பேரரசின் விரிவாக்கத்தை விரும்பத் தொடங்கினான். சாத்தானின் அல்லது வேறு சில விரோதிகளின் ஆலோசனைகளின் மூலம் அண்டை மாநிலங்களில் சிலவற்றை ஒன்றிணைக்க எண்ணினான்.

பேராசைக்குரிய தன்மைக்கு வழிவகுத்தது.

போர் செய்ய போகலாமா வேண்டாமா என்று தேவனிடம் கேட்டபின்னரே (1சாமு. 30:8, 23:2, நியா. 20:18, 23, 2சாமு. 5:19, 23) சண்டைக்கு செல்லும் பழக்கம் இருந்த தாவீதிற்கு, இந்த முறை தேவனை உதவிக்கு நாடாமல் தன் சுய பலத்தை நிரூபிக்க முயல்கிறார்.

1நாளா. 21:1  சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது என்று காண்கிறோம்.

*3. பாவம் செய்த தாவீதை அழிக்காமல் ஏன் ஜனங்களில் சிலரை அழித்தார்?*
தாவீதை ஏன் அழிக்கவில்லை என்ற தேவனுடைய எண்ணத்தை யார் கணிக்கமுடியும்? (ரோ.11:34, 1கொரி.2:16)

ஆனால், ஜனங்கள் அழிக்கப்பட்டதன் விளைவு, தேவனால் தந்தருளப்பட்ட வாய்ப்புகள் மூன்றே மூன்று தான். அதில் ஏதாவதொன்றை தாவீது தேர்ந்தெடுக்கும்படி தேவனால் கட்டளை பிறந்தது. வசனங்கள் கீழே:

2சாமு. 24:12 நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

2சாமு. 24:13 அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:

(1) உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது

(2) மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது

(3) உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.

ஆக, இந்த மூன்று காரியங்களில் காலம் குறைவானதும், அந்நியர் கையில் மடியாமல், தேவனுடைய இரக்கத்தை எதிர்பார்த்து குறைந்த தண்டனையுடன் தப்பித்துக்கொள்ள எத்தனித்து தாவீது 3வது காரியத்தையே தெரிந்து கொண்டதின்படி ஜனங்கள் மடிந்தார்கள். (2சாமு. 24:14)

*4.இந்த நிகழ்வை எப்படி தற்கால நிகழ்வோடு ஒப்பிட்டு சரி, தவறு என்று மக்களுக்கு கூறலாம்?*
தாங்கள் நடத்தும் சுவிசேஷ கூட்டத்திற்கு அல்லது சபையில்;

50 பேர் கூடினால், அதை வெளியே சொல்லும்போது ”சுமார் 100” பேர் வந்தார்கள் என்றும்,

100 பேர் இருந்தால் 250 என்றும்,

500 என்றால் 1000 என்றும் இப்படி தங்களுக்கு மேன்மையை பறைசாற்றவும், தங்களது பலத்தையும் மற்றவர்களை காட்டிலும் நான் சிறந்தவன் என்றும் காண்பிக்க நினைக்கு இக்கால ஊழியர்களுக்கு இந்த சம்பவம் சவுக்கடி !!

உள்ளதை அப்படியே சொல்லவேண்டும்.

மேலும், வகுப்பறையில் அநுதின பதிவேடு குறிப்பது போல சபை கூடுகையில் இந்த வாரம் எத்தனை பேர் வந்தார்கள், இந்த வருஷத்தில் எத்தனை முறை இவர் வரவில்லை, அந்த குடும்பம் எத்தனை வாரங்கள் தவறினார்கள் என்று வருட கடைசியில் வாசிப்பதும் உகந்ததல்ல. தவறாமல் வரவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியது அவசியம். அதை அனைவர் முன்னிலையிலும் வாசித்து தான் ஒழுங்கு என்றும் மற்றவர்கள் இப்படி ஒழுங்கீனம் என்று சுட்டிக்காட்டின எந்த சபைக்கூட்டமும் அதிகமாக ஆத்துமாக்களில் வளரவில்லை என்பது நான் கண்டறிந்த உண்மை !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக