வெள்ளி, 1 ஜனவரி, 2021

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 01 Jan 2021

 

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

உன்னதங்களில் வாசம் செய்து நம்மில் அதிசயங்களும் அற்புதங்களும் நடப்பிக்கிற உன்னதமான தேவனுக்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

புதிய வருஷத்தை காண கிருபை செய்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.

ஆசீர்வாதமான புதிய ஆண்டினை தேவன் தாமே நமக்கு வாய்க்க செய்வாராக.

நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார் 2 கொரி 9:8.

வாழ்வில் உயர்வோ தாழ்வோ – மனத்தாழ்மையை விட்டு விடாதிருங்கள்.

புதிய உற்சாகத்திலும் புதிய அன்பிலும் பெருக தேவன் கிருபை பாராட்டுவாராக.

புதிய தீர்மானங்களை எடுங்கள். அதில் நிலை கொள்ளுங்கள். உதாரணமாக சிலவற்றை பட்டியலிட்டுள்ளேன். இது போல, குறைந்தது 3ஐ எடுக்கவும்.

குறைந்தது 10 வசனாமகிலும் வேதாகமத்தை திறந்து தினம் படிக்கவேண்டும். (மொபைலில் அல்ல)

குறைந்தது 10 நபர்களுக்காவது குறித்து வைத்து தினசரி ஜெபிக்க.

நாம் அறியாத ஜனத்தில் இருக்கும் 1 குழந்தைக்கு படிப்பு சிலவு செய்ய.

அவ்வப்போது ஜெபித்து கொண்டே வாழ்வது ஒருபக்கம் இருக்க, தினம் ஜெபிக்கும் நேரத்தை தீர்மானித்து, கடை பிடிக்க.

படுக்கைக்கு போகுமுன்னர் பிறர் மீது இருக்கும் கோபத்தை மன்னித்து, இனி நினையாமல் இருக்க.

இரட்சிக்கபடாத குறைந்தது 3பெயரை குறித்து வைத்து அவர்களுக்காக ஜெபிக்கவும்.

கஷ்டத்தின் மத்தியில்,
உத்தமமாய் நடக்கும் ஏதாவதொரு ஊழியத்தின் பாரத்தில் பங்கெடுங்கள்.

ஒருவரையும் குறை கூறாமல் இருக்க.

ஒருவரையும் கிண்டல் பேசாமல் இருக்க

வாரத்தில் ஒரு முறை உபவாசம் இருக்க.

இப்படி சில தீர்மானங்களை எடுக்கலாம்.

தேவன் தாமே நம அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

வாசிக்கவும் : ***** எபிரெயர் 12:12-13 *******

எடி ஜோயல் சில்ஸ்பி
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

---------------*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக