வெள்ளி, 4 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 4 Dec 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

உயிர்தெழுந்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இறந்தவர்கள் யாராவது எதையாவது சொல்வதாக கனவுக் கண்டால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் உண்டு.

அதிலும் வயதானவர்கள் கனவில் வந்து எதையாவது சொல்லிவிட்டால் அதற்கு மறு பேச்சே இல்லை.

ஆனால், எதற்காகவும், எந்த சூழ்நிலையிலும், யார் சொன்னாலும், *இயேசு கிறிஸ்துவின் கட்டளையை மீற கூடாது*.

எலியாவையும், மோசேயையும் பார்த்ததும்,
பேதுருவும், யோவானும்,
இயேசுவைக் காட்டிலும் “அவர்கள் இருவரும்” முக்கியமாய்ப்பட்டார்கள்.

அந்த க்ஷனத்தில் தானே, பிதாவானவர், வானத்திலிருந்து
“ *இயேசுவுக்கு செவிகொடுங்கள்* ” என்று எச்சரிக்கவேண்டியிருந்தது.  மாற்கு 9:2-7

இயேசுவின் தாயாக இருந்தாலும் சரி,
பாட்டன் முப்பாட்டனாக இருந்தாலும் சரி,
*இயேசுவின் கட்டளை தான் நமக்கு பிரதானம்*.

அவரின் கட்டளையை முழுவதுமாக பற்றிக்கொண்டு கடைபிடிப்போம்

*சகலத்தையும்* தேவன் நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுவார்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய :  https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk

ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில :  http://kaniyakulamcoc.worldbibleschool.org/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக