வியாழன், 3 டிசம்பர், 2020

#1039 - உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை என்ற வார்த்தையை தெளிவுபடுத்தவும்.

#1039 - *உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை என்ற வார்த்தையை தெளிவுபடுத்தவும்*.

*பதில்* :
“இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” என்று சங்கீதம் 121:4ம் வசனத்தில் இந்த இரு வார்த்தைகளையும் நாம் காணமுடியும்.

எந்த அசாதாரண மனிதனும் அசதியில் தூங்கிவிடுவான்.
இரானுவ அதிகாரியானாலும் சோர்வு வரும்போது தூங்கிவிடுவார். தன் பிள்ளையைக் காக்கும்படி இரவு பகலாக கண்விழித்துக் கவனித்துக்கொண்டிருக்கும் தாய் கூட ஒரு க்ஷனத்தில் தன்னையறியாமல் கண் அசந்துவிடுவாள். எப்பேற்பட்ட போர்வீரனும் இரவு மயக்கத்தில் உறங்கிவிடுவான்.

ஆனால், நம்மைப் படைத்த தேவன், சோர்வடைவதில்லை, ஒருபோதும் கவனக்குறைவாக விட்டுவிடுவதில்லை, அவர் சோர்வடைவதில்லை, அசதியடைவதில்லை, மறப்பதுமில்லை. எப்பொழுதும் அவர் கண் நம்மை கவனித்துக்கொண்டேயிருக்கும்.

வசனங்களைக் காணவும்.
சங். 32:8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

ஏசா. 27:3 கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.

நம்முடைய தேவன் சிறிது நேரம் அசதிப்பட்டு உறங்குகிறவருமல்ல, சோர்வில் தூங்குபவருமல்ல. எப்போதும் விழித்துக்கொண்டு நம்மை கண்காணிக்கிறவர்.

வழக்கச்சொல்லில் சொல்ல வேண்டுமானால் :
உறக்கம் என்பது (slumber) - அசதியில் வரும் குட்டித்தூக்கம்
தூக்கம் என்பது (sleep) - நன்றாக படுத்து இளைப்பாறி தூங்குவது.

அப்படிப்பட்ட நமது தேவனிடம் ஜெபிக்கும் போது பயத்தோடும் நடுக்கத்தோடும் ஜெபிக்கவேண்டும் என்பதை மறந்து;  கைகளைத் தட்டிக்கொண்டே இக்காலங்களில் ஜெபிக்கும் பழக்கம் கிறிஸ்தவ மதத்தினரிடையே ஓங்கி வளர்ந்துக்கொண்டு வருகிறது. கூடிய சீக்கிரத்தில் வெடி வைத்தும், ஒரு சிலையை நாட்டி அதன் காதில் சப்தம் எழுப்பியும் ஜெபிக்க துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கிறிஸ்து வருவதற்குள் பாரம்பரியத்தையும் கட்டுக்கதைகளையும் களைந்து கிறிஸ்தவத்திற்கு திரும்புவார்கள் என்று நம்புவோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக