*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சகல துதியும், கனமும் நம்முடைய சர்வ வல்ல தேவனுக்கே நாம் செலுத்துகிறோம்.
2020-இன் துவக்கத்தில் இருந்தவர்கள் பலர் இறுதி நாளான இன்றை காணவில்லை.
வருடத்தின் துவக்கத்தில் எடுத்த தீர்மானித்தை வெகு சிலரே நிறைவேற்ற முடிந்தது.. பலர் மறந்தும் போனார்கள் !! கடைபிடிக்கமுடியாமல், பாதியில் விட்டவர்களும் உண்டு.
எப்படி இருந்தாலும், இன்று வரை – நமக்கு ஜீவனையும், சுவாசத்தையும் கொடுத்த தேவனுக்கே சகல மகிமையும் கனமும் நன்றிகளும். அப்.17:25
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரிப்போம். எபே. 5:20
மகா சபையிலே அவரை துதிப்போம். திரளான ஜனங்களுக்குள்ளே அவரை புகழுவோம். சங். 35:18.)
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்வோம்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1தெச. 5:18
நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். சங். 97:12
*ஜெபம்* :
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். வெளி. 11:17
இரக்கமும் மனஉருக்கமும் வல்லமையும் பராக்கிரமும் கிருபையும் மாட்சிமையும் நிறைந்த எங்கள் பரலோகத்தின் தகப்பனே, நீர் எங்களுக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காவும் நன்றி அப்பா...
ஒரு தெள்ளுபூச்சியைபோல நாங்கள் காணப்பட்டாலும், எங்களையும் நீர் நினைத்து பாதுகாத்து பராமரித்து போஷித்து இந்நாள் வரை சகல நன்மையோடும் சுகத்தோடும் பெலத்தோடும் காத்தமைக்காக கோடனுக்கோடி நன்றிகளை ஏறெடுக்கிறோம்… மனிதனால் வகுக்கப்பட்டதின்படி, நாளைய தினத்தில் இருந்து ஒரு புதிய வருடக்கணக்கை துவங்குகிறோம். உம்முடைய அநாதி ஸ்நேகமும், வழிநடத்துதலும், கிருபையும், எங்கள் வாழ்விற்கு தேவையான சத்திய வெளிச்சமும் வேதவசனத்தின் மூலம் நாங்கள் அறிந்து, கீழ்பட்டு, தொடர்ந்து சீர்பட்டு, உமக்கு உகந்த பிள்ளையாக நாங்கள் வாழ, எங்களுக்கு இன்னும் அதிகமான பெலத்தையருளுவீராக.
எங்கள் இரட்சகரும் மீட்பரும் ஆண்டவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த நன்றிகளை ஏறெடுக்கிறோம் எங்கள் சர்வ வல்லமையுள்ள அன்பின் பிதாவே.. ஆமென்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக