புதன், 30 டிசம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 30 டிசம்பர் 2020

 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

கிருபையாய் நம்மை இது வரை வழிநடத்தின தேவனின் நாமத்திற்கே சகல கணமும் துதியும் உண்டாவதாக.

இன்னும் ஒரு நாளில் இந்த வருடம் முடிவிற்கு வருகிறது. இந்த நாள் வரையிலும் கர்த்தருடைய கிருபை இருந்ததே !!
அவருக்கு நன்றிகளை இன்றும் ஏறெடுப்போம்.

இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். 1நாளா. 29:13

கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர். ஏசா. 12:1

என் பிதாக்களின் தேவனே, நீர் எங்களுக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை எங்களுக்கு அளித்தமைக்காக உம்மைத் துதித்துப் புகழுகிறோம். தானி. 2:23

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். எபி. 13:15

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் நம்மை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் நம்மைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2கொரி. 2:14

…பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். யோ.11:41

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக