செவ்வாய், 29 டிசம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி, 29 Dec 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee


சகல நன்மையினாலும் ஆசீர்வதத்தினாலும், கிருபையினாலும் நம்மை நடத்தினவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பலருக்கு இந்த வருடம் ....
ஒரு நாள் ஒரு யுகமாய் இருந்தது.
வியாதியின் வியாகுலம்,
கடன் பாரங்கள்,
வேலை பறிபோனது,
வேலை கிடைக்காமல் அலைந்த வெறுப்பு.
குடும்ப சண்டைகள் / பிரிவினைகள்,
குடும்ப நபர்களின் மரணங்கள்,
தனித்துவிடப்பட்ட நிலைமை,
ஆதாரமே இழந்த சூழ்நிலை,
ஆகாரம் கிடைக்காமல் இருந்த வேளைகள்,


*இப்படிபட்ட எத்தனையோ சூழ்நிலையையும் கடந்து இந்த நாளை காண செய்த தேவனுக்கு கோடானுக்கோடி நன்றிகள்*. புதிய வருடம் பார்க்கும் வரை – என்னோடு சேர்ந்து நீங்களும் காலையில் நன்றிகளை ஏறெடுங்கள்  !!

அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல.. ஆதி 32:10

எங்கள் சகோதர சகோதரிகள் மற்றும் இரத்தபந்தங்களின்,  முகங்களை காண செய்தமைக்காக ஸ்தோத்திரம் ஆதி 48:11

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். சங்13:6

கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். சங்30:1

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். சங் 92:4

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு இம்மட்டும் ஜெயங்கொடுத்த தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரி15:57

தீவிரமான துக்கம் கடந்து வந்த போதும் – எங்களுக்கு ஆறுதலாய் இருந்து சகலவற்றையும் நேர்த்தியாய் செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் – 2 கொரி 4:8-10

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
+91 8144 77 6229

*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

எங்களது வலைபதிவுதளம்:
https://joelsilsbee.wordpress.com/

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக