*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
கிருபையுள்ள தேவனின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக.
பிள்ளை பேறு பாக்கியம் இல்லை என்றதும் துவண்டு விடுகிறோம்.
நான் *என்ன பாவம் பண்னிணேன்... எனக்கு ஏன் இப்படி*,
... நான் யாருக்கும் *எந்த துரோகமும் செய்யலியே*,...
என்று நினைத்து எப்போதும் வேதனை அடைகிறோம்.
அந்த வேதனையும் கஷ்டமும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று ...
அப்படி ஒரு *சூழ்நிலையில் இருந்த போதும்கூட,*
சகரியாவும் எலிசபெத்தும் கர்த்தருடைய சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் *குற்றமற்றவர்களாய்* நடந்து, தேவனுக்கு முன்பாக *நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்*. (லூக் 1:6) **
*இதை மனதில் கொள்ள வேண்டும்*.
அதேபோல, அன்னாள் என்னும் பெண்மணி, *வருஷந்தோறும்* (1 சாமு 1:7) துக்கப்படுத்தப்பட்டும், துவண்டு விடாதபடி, தொடர்ந்து தேவனுடைய பாதத்தில் ஜெபித்துக்கொண்டே இருந்தாள். (1 சாமு 1:10)
மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் இருதயத்துடிப்பை (உயிர்) உருவாக்க முடியாது !! அதை தேவன் தான் அனுக்கிரகம் செய்து *பரத்திலிருந்து* கொடுக்க வேண்டும். (சங்.127:3)
அன்னாளும் சரி, எலிசபெத்தும் சரி - சுய முயற்சியல்ல, மருத்துவரை மாத்திரமே சார்ந்தல்லாமல், தேவனை இன்னும் அதிகமாய் தேடினார்கள், ஜெயம் பெற்றார்கள்.
எந்த கடவுள் அவர்களுக்கு இறங்கினாரோ,
அதே தேவனை தான் நாமும் தொழுகிறோம்.
அவர் கட்டளைக்கு செவிசாய்த்து,
சுயத்தை ஆராய்ந்து, அவருக்குப் பிரியமில்லாததை வாழ்க்கையிலிருந்துக்களைந்து,
சமர்பித்து, தொடர்ந்து ஊக்கத்தோடு ஜெபிப்போம்.
*நிச்சயம் நினைத்தருளுவார்*.
அவருடைய வேளைக்கும், அவருடைய சித்தத்திற்கும் ஒப்புக்கொடுப்போம்.
*இன்று கர்த்தருடைய நாள். தேவனைத் தொழுதுக்கொண்டு கர்த்தரின் மரணத்தை நினைவுகூற தவறவேண்டாம்*
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
*கேள்வி மற்றும் வேதாக பதில் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
அனைத்து கேள்வி பதிலும் காண:
https://joelsilsbee.wordpress.com/qa/
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக