#1058 - *மத்தேயு 16:27, ரோமர் 2:6, 2 கொரிந்தியர் 5:10, கலாத்தியர் 6:7, வெளி 14:13 பதிவிட்ட வசனங்களில் கிரியைகளுக்கு கிடைக்கின்ற பலனை குறித்துசொல்கிறது. இவை எப்படிப்பட்டவை என்பதை குறித்து விளக்கம் தாங்க*.
*பதில்* : படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்படி, முதலாவது, நீங்கள் குறிப்பிட்ட வசனங்களை கீழே பதிவிடுகிறேன்.
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
ரோமர் 2:6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
2கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
கலாத்தியர் 6:7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
வெளிபடுத்தல் 14:13 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.
*விளக்கம்*:
ஆதி மனிதன் ஆதாம் துவங்கி கடைசியில் நியாயதீர்ப்பு வரை, மனிதனின் ஒவ்வொரு கிரியைக்கும் பலனை அவரவர் பெற்றுக்கொள்வர்.
தேவனுடைய வார்த்தையை நம்புவதோடு நில்லாமல், அதன்படி செயல்படவேண்டியுள்ளது.
நமக்கு மேலே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று விசுவாசிப்பதோடு நின்றுவிடுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவ்வாறு வெறுமனே இருந்து விடும்போது, நமக்கும் பிசாசிற்கும் வேறுபாடற்ற நிலைமையாகிவிடும். யாக். 2:19
அவர் வார்த்தைக்கு செவிசாய்ப்பதே அவசியம். இல்லையென்றால் நம் வாழ்க்கை வீணாக போய்விடுகிறது. யாக். 2:20
கேட்டதோடு நில்லாமல், அதை மற்றவர்களுக்கு எடுத்துச்சொன்னாலும் போதித்தாலும், பிரசங்கித்தாலும் பிரயோஜனமில்லையாம் !! பரலோகத்தில் பிரவேசிக்க வேண்டுமெனில், நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அதன்படியே *செயல்பட வேண்டியது* அவசியம். மத். 7:21, லூக்கா 6:46, ரோமர் 2:13.
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள். தீத்து 1:16
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக். 1:22
ஆகவே, நாம் செயல்படும் எந்தக் கிரியைக்கும், பலன் உண்டு என்பதில் வேதம் நமக்கு தெள்ளத்தெளிவாக பறைசாற்றுகிறது.
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
நாம் செய்யும் கிரியை, சத்தியத்தின்படி சத்தியமாக (உண்மையாக, நேர்மையானதாக) இருந்தால் அதற்கேற்ற பலன் பரலோகத்தில் நிச்சயம் நமக்குண்டு.
தேவனுடைய வார்த்தையின்படியே செய்யாமல், தன் இஷ்டப்படி செயல்பட்ட ஆதாம், சவுல், தாவீது, மோசே என்று அனைவருமே தண்டிக்கப்பட்டனர்.
நாம், தேவ வார்த்தைக்கு மாறாமல் அப்படியே கீழ்படியும் போது, நம் கிரியைக்கு தக்க பலனை பெறுவோம். எபே. 6:7.
… அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். 1கொரி. 3:8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
சனி, 26 டிசம்பர், 2020
#1058 - வசனங்களில் கிரியைகளுக்கு கிடைக்கின்ற பலனை குறித்துசொல்கிறது. இவை எப்படிப்பட்டவை என்பதை குறித்து விளக்கம் தாங்க.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக