சனி, 26 டிசம்பர், 2020

#1057 - இரண்டாவது முறையாக கொடுக்கப்பட்ட பத்துக்கட்டளைகளை எழுதியது மோசேயா அல்லது தேவனா? யாத். 34:28 மற்றும் உபாகமம் 10:4திலும் வேறுபடுவது போல் உள்ளது?

#1057-  *இரண்டாவது முறையாக கொடுக்கப்பட்ட பத்துக்கட்டளைகளை எழுதியது மோசேயா அல்லது தேவனா?* யாத். 34:28 மற்றும் உபாகமம் 10:4லும் வேறுபடுவது போல் உள்ளது?

*பதில்* : இதற்கான வசனங்களை கீழே அப்படியே பதிவிட்டபின்னர் அதன் பொருளை பார்ப்போம்.

1)
யாத். 34:1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; *நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன்*.

2)
யாத். 34:28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; *அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்*.

3)
உபா. 10:1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக.

உபா. 10:2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை *நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்*; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார்.

உபா. 10:4 முன்னே சபைகூடிவந்த நாளில் *கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்தபிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்*.

முதலில், *தேவனே தன் சொந்த கரங்களால் எழுதிக்கொடுத்த பலகையை* (யாத். 32:16) மோசே தன் கோபத்தில் உடைத்துப்போட்டதற்காக ஏதாகிலும் அவருக்கு தண்டனையாக வந்திருக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பிலும், மறுபடியும் தேவனே எப்படி எழுதியிருப்பார் என்பதால், இரண்டாவது முறை கற்பலகையில் தேவன் அல்ல, மோசேயை உட்கார வைத்து வேலை வாங்கினார் என்று  நம் மூளை நமக்கு யாத்.34:28ஐ வாசிக்கும் போது சொல்ல முயற்சிக்கிறது.

ஆனால், யாத்.34:1 மற்றும் உபா.10:2 & 4ஐ கவனிக்கும் போது, மிகத்தெளிவாக தேவனே இரண்டாம் முறையும் தன் கையால் எழுதினார் என்பதில் சந்தேகமேயில்லை.

யாத். 34:28ல் வரும் வாக்கியத்தை நன்கு கவனிக்கவும் :
அங்கே “*அவன்*” அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; “*அவன்*” பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

*இந்த வசனத்தில் இரண்டாவதாக* வரும் “*அவன்*” என்பதை *அவர்* என்று வாசிப்பதே சரியான மொழிபெயர்ப்பு என்பதை யாத்.34:1, உபா. 10:2 & 4ன் வசனத்தின் அடிப்படையில் வேதஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

அவர் என்ற பதம் வரும்போது அந்த வாக்கியமும் கேள்வியும் நமக்கு தெளிவு பெறுகிறது.

ஆகவே, இரண்டாவது முறையும் தேவனே தன் சொந்தக் கைகளால் எழுதி தந்தார் என்பதில் எந்த தயக்கமும் இல்லை. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக