#1056 - *நட்பிற்கும் ஐக்கியத்திற்குமான (கூட்டுறவு) வித்தியாசம் என்ன?*
*பதில்* : இரண்டு வார்த்தைகளும் வேறுபட்டவை.
அனைவரிடமும் நட்பு கொள்ள முடியும்.
ஆனால் அனைவரிடமும் ஐக்கியம் அல்லது உறவு கொள்ள முடியாது.
ஒருவரது ஆன்மீக நிலையைப் கவனியாமல், நண்பர்களானவர்களோடு ஐக்கியம் கொள்வது கடினம்.
*எ.கா* : ஒரு கிறிஸ்தவர்,
இஸ்லாமியர் மற்றும் இந்துக்களுடன் நட்பாக பழகுவதில் உள்ள சுதந்திரமானது;
ஒருவருக்கு மற்றவரது ஆன்மீக நிகழ்வுகளில் பங்கெடுப்பது இயலாது.
விசுவாசத்தில் சரியான புரிதல் இல்லாத, அல்லது தெய்வீகத்தன்மையில் சரியான புரிதல் இல்லாத ஒருவருடன் ஐக்கியம் அல்லது கூட்டுறவில் இருப்பது கடினம் ஆனால் அவருடன் நட்பை (அன்பை) பராமரிக்க முடியும்.
இல்லையெனில் ஒரு கிறிஸ்தவருக்கு, *கிறிஸ்துவுக்கு வெளியே* நண்பர்கள் இருக்க முடியாது.
2தெச. 3:14-15 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
1கொரி. 5:9-11
விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன்.
ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே.
நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.
இந்தியாவை விட்டு, ஏறத்தாழ 30 வருடங்களாக பல நாடுகளில் சுற்றித் திரியும் எனக்கு, பலதரப்பட்ட விசுவாசத்தில் உள்ள, பலவேறு மதகோட்பாடுகளில் உள்ள, கடவுள் புறக்கணிப்பாளர்கள் உட்பட, இயற்கையே தெய்வம் என்பவர்கள் போன்றவர்களும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் நெருங்கிய மற்றும் அன்பான நண்பர்கள் எனக்கு உள்ளனர். நாங்கள் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறவர்கள். நண்பர்கள் என்று ஒதுக்கி வைக்கமுடியாத அளவிற்கு அவர்கள் அனைவரும் சிநேகம் பாராட்டுபவர்கள்.
ஆனாலும், கர்த்தருடைய ஊழியத்தில், வேலையில், கூட்டாளிகள் அல்ல. அவர்களுடைய மதசடங்குகளில் அல்லது கேளிக்கைகளில் அல்லது கூட்டங்களில் என்னால் பங்கெடுக்கவோ அல்லது அவர்களை ஊக்குவிக்கவோ முடியாது.
சத்தியத்தின்படியுள்ள கிறிஸ்தவர்களுக்கு, 2 யோவான் 9-11ன் மூலம் மிகப்பெரிய சவுக்கடி போன்ற ஆலோசனையைத் தருகிறது. இந்த வசனத்தில் நட்பிற்கும் ஐக்கியத்திற்குமான விரிவாக்கத்தை வாழ்வில் தெளிவாக உணரமுடியும்.
பல சமயங்களில், உறவுகள் மற்றும் தொடர்புகள் இருப்பதால், அவர்களுடனான நமது நட்புறவின் மூலம் தேவனுடைய ராஜ்யத்திற்கும் அவர்களது ஆத்மாக்களின் இரட்சிப்பிற்கும் இன்றியமையாத விஷயங்களில் அவர்களிடத்திற்கு சத்தியத்தை எடுத்துச்செல்வதில் சுலபமுண்டு. நம்முடைய நேர்மையான நடவடிக்கைகளின் மூலம் அவர்கள் சத்தியத்தை நம் வாழ்வியலில் கண்டு மனந்திரும்ப ஏதுவாகிறது.
வேதப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கையானது நட்பில் உள்ளவர்களினூடே விரோத செயலாக எடுக்கப்படக்கூடாது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக