#1055 - *மூல மொழியில் உள்ள வார்த்தைகள் மொழியாக்கம் செய்யாமல் மூல மொழியில் உள்ளவாரே உள்ள வார்த்தைகள் எவை எவை?*
உதாரணமாக : அல்லேலூயா, ஆமென், இம்மானுவேல், மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின், ஏலி! ஏலி! லாமா சபக்தானி, கொர்பான், எப்பத்தா, மேசியா, போன்று உள்ள வார்த்தைகளை பட்டியலை எழுதுங்கள்...
*பதில் :* இது ஒரு பெரிய பட்டியலாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது பட்டியலில் இடம்பெறாத மற்ற வார்த்தைகளை முடிந்த அளவு தேடி எடுத்து கீழே பட்டியலிடுகிறேன்.
1. சிகோயோன் (அலைந்து திரிவது) - சங். 7ன் தலையங்கம், ஆபகூக் 3:1
2. ஊரீம் தும்மீம் - யாத். 28:30, லேவி. 8:8
3. அகிலேத் ஷகார் (காலையின் பின்னடைவு) - சங். 22ன் தலையங்கம்
4. அல்மோத் (கன்னி) - 1நாளா. 15:21, சங். 46ன் தலையங்கம்
5. அல்தஷ்கேத் (அழிக்காதேயும்) - சங். 57, 58, 59 & 75ன் தலையங்கம்
6. கித்தீத் - சங். 8, 81 & 84ன் தலையங்கம்
7. இகாயோன் (தியானம்) - சங்.9:16
8. யோனாத் ஏலேம் ரிக்கோகீம் (அந்நியர் மத்தியில்) - சங். 56ன் தலையங்கம்
9. மகலாத் (நோய்) - சங். 53ன் தலையங்கம்
10. மஸ்கீல் (அறிவுறுத்தல்) - சங். 32, 42, 44, 45, 52, 53, 54, 55, 74, 78, 88, 89, 142ன் தலையங்கம்.
11. மிக்தாம் (தங்கம்) - சங். 16, 56, 57, 58, 59, and 60ன் தலையங்கம்.
12. முத்லபேன் - சங். 9ன் தலையங்கம்.
13. நெகிநோத் (கம்பிகளால் ஆன வாத்தியக்கருவி) - சங். 4, 6, 54, 55, 61, 67, 76ன் தலையங்கம்.
14. நெகிலோத் (குழாய்கள்) - சங். 5ன் தலையங்கம்.
15. சேலா (இடைநிறுத்தம்) - 70முறை சங்கீத புத்தகத்தில் வருகிறது.
16. செமினீத் (எட்டு சரம் கொண்ட கருவி) - சங்.6ன் தலையங்கம்.
17. சோஷனீம் (அல்லிகள்)- சங்.45, 49, 80ன் தலையங்கம்.
18. பிகெமோத் (நீர்யானை) - யோபு 40:15
19. லிவியாதான் (முதலை/திமிங்கலம்/நீண்ட பாம்பு) - யோபு 41:1, ஏசா 27:1, சங். 74:14, சங். 104:26,
20. கேரூபீன்கள் (தேவனிடத்தில் சேவிக்கும் தூதர்கள்) - யாத். 25:19
21. சேராபீன்கள் (தேவனிடத்தில் சேவிக்கும் தூதர்கள்) - ஏசா. 6:6
22. ஷிபோலேத் (நீரோடை) - நியா. 12:6
…. இந்த பட்டியல் முழுமையல்ல.. இன்னும் அதிகம் உள்ளது.
முழுமையான பட்டியல் எடுக்க முயற்சிக்கிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக