திங்கள், 7 டிசம்பர், 2020

#1043 - விசுவாசத்தை முழுமையாக பெற்றவர்கள் (கடவுளே அதை தந்தால் முழுமையாக தானே இருக்கும்) ஆகிவிட முடியுமா..?

#1043 - *விசுவாசத்தை  முழுமையாக  பெற்றவர்கள் (கடவுளே அதை தந்தால் முழுமையாக தானே இருக்கும்) ஆகிவிட முடியுமா..?*

#1043 -  *உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். மாற்கு 9:24.  விசுவாசம், நாம் கடவுள் மீது வைப்பது.  ஆனால் அவிசுவாசம் (விசுவாசமின்மை, இதெல்லாம் எப்படி நடக்கும் என்கிற சந்தேகம் போன்றவை) நீங்கும்படி கடவுள் எந்த விதத்தில் உதவி செய்வார்..?  


*பதில்* :
நம்பும்படியான திராணியைத் தரும்படி, அதாவது தன் விசுவாசத்தின் குறைபாடுகளை நீக்கும்படியாக கிறிஸ்துவிடம் கேட்கிறார்.

கிறிஸ்துவின் மீது “முழு” நம்பிக்கையை வைக்க, தனக்கு பலத்தையும் கிருபையையும் கொடுக்கும்படி கேட்கிறார்.

உதவிக்காக இரட்சகரிடம் வரும் அனைவருக்கும் இந்த வேண்டுதலை வைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நம்முடைய அவநம்பிக்கையிலும், நம்முடைய சந்தேகங்களிலும் நமக்கு அவருடைய உதவி தேவை, அவருடைய கிருபையான உதவி இல்லாமல் நாம் ஒருபோதும் அவரை நம்பியிருக்க மாட்டோம்.

கிறிஸ்துவின் வல்லமையில் அவர் சிறிய அளவிலான நம்பிக்கையைக் கண்டார். ஆனால், அது அவனது மகனுடைய கோளாறுகளின் வீரியத்தின் மூலம், குணமாகுமா என்ற நம்பிக்கையே அற்றுப்போயிருந்தன.

மேலும், இயேசுகிறிஸ்துவின் சீஷர்களிடத்தில் அவன் முயற்சிசெய்தும், அவர்களால் குணப்படுத்தமுடியாமல் போனதை அவன் கண்டதால், இனி யாரால் இது நடக்கும் என்று மிகவும் வியாகுலத்தில் இருந்திருக்கிறான். மாற்கு 9:18

இந்த சூழ்நிலையில், ஒரு விஷயம் நடக்கும் என்று நம்புவது அவ்வளவு சுலபமில்லை.

ஆகவே, இயேசு கிறிஸ்து சொல்கிறார், நீ விசுவாசித்தால் உன் மகன் விடுதலை பெறுவான் என்று சொல்ல, அவனால் அதையும் நம்ப முடியாமல், தயவுசெய்து அதற்கும் உதவுங்கள் என்று கேட்கிறான். வ22-24

தன்னுடைய நம்பிக்கையின்மையை எதிர்ப்பதற்கு அவனுக்கு பலம் இல்லை.  அவநம்பிக்கைக்கு எதிரான சக்தி அவனுக்கு அவசியப்படுவதைக் கேட்கிறான்.

சிரியாக் பதிப்பு அதை "என் விசுவாசத்தின் குறைபாடு" என்று மொழிபெயர்க்கிறது.
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக