*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
சகல கிரியையையும் மேன்மையாய் நடப்பிக்கிற கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வேலை செய்வதும், உழைத்து சாப்பிடுவதும், *ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதம்*.
*உலகத்தில் உழைப்பது சாபம் அல்ல*.
ஏதேன் தோட்டம் துவங்கின காலம் முதல் (ஆதி. 2:15), *மனுஷனை, தேவன் வேலை செய்ய கட்டளை கொடுத்தார்*.
சோம்பலாய்,
வீட்டில் உட்கார்ந்து இருப்பது, ஆண்களுக்கு தகாத ஒன்று.
அந்த வீடு வளர்ச்சி காணாது. பிர. 10:18
ஆவியானவர்,
நீதிமொழிகளின் மூலம் சொல்லுவது... வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, *பின்பு உன் வீட்டைக் கட்டு*. (நீதி. 24:27)
காலையிலும் மாலையிலும் வேலை செய்ய நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். பிரசங்கி 11:6
சம்பாத்தியத்தை சேமிக்க கட்டளை இருக்கிறது. யோ. 6:12...
சூரியன் அஸ்தமிக்கும் போது, நாம் ஓய்வு எடுக்கும் நேரம். ஆதி. 15:12, உபா. 23:11
நம்முடைய பிரயாசத்தை, தேவன் கணக்கில் வைத்து அதை நிறைவேற்றுகிறார். பிர. 3:13, சங். 128:2, ஏசா. 62:8
ஆசீர்வாதம் நமக்கென்று முன்னமே வைக்கப்பட்டிருகிறது.
நாம் பிரயாசப்படும் போது, அதை அடைகிறோம்...எபி. 6:10
Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக