திங்கள், 9 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 9 Nov 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

அன்பின் தேவனாகிய நம் கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

சட்டத்திற்கு கீழ்படியாமல் சாலையில் வாகனம் ஓட்டினால் சிறிது தூரம் எந்த விபத்தும் இல்லாமல் நிச்சயம் பிரயாணம் செய்ய முடியும். ஒருவேளை கொஞ்ச காலம் அருகாமையில் உள்ள சாலையில் பிரயாணிக்கலாம்.. ஆனால் நாள் காவல் துறை கையில் ஒரு நாள் அகப்படும் போது செய்த தவறின் தண்டத்தொகையை கட்டுவதிலிருந்து மீளவே முடியாது.

அதுபோல கிறிஸ்தவன்;
கிறிஸ்துவின் உபதேசத்திற்கு முற்றிலும் கீழ்படியாமல், தனக்கு தோன்றியபடி தாறு மாறாக பின்பற்றும்போது, அதன் தண்டத்தொகையை நியாயதீர்ப்பு நாளில் கட்டாயம் வசூல் செய்யப்படும்…அன்று செலுத்தும் தண்டத்தொகையானது, பணம் அல்ல, எப்படியாவது பரலோகம் போகவேண்டும் என்று வாழ்நாள் முழுக்க போராடிய  சொந்த ஆத்துமாவின் அழிவாக இருக்கும் !!

வாரந்தோறும் தேவனுடைய தொழுகை,
கர்த்தருடைய பந்தி,
காணிக்கை, பாடல், ஜெபம், செய்தி என்று அப்போஸ்தலர்கள் செய்யத் தவறுகிறது,
அநுதின ஜெபம், வேதவாசிப்பு மாத்திரமல்ல,
கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிந்தாலே நாம் மற்ற கிறிஸ்தவர்களிடத்திலும் அன்பு கூறுகிறோம் என்கிற சிக்கலும் உள்ளது !!

யோவான் 13:34-35ஆம் வசனத்துடன் நின்றுவிடக்கூடாது…
{யோ 13:34-35  நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.  நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்}.

வார்த்தைக்கு கீழ்படியாமல், மற்றவர்களிடத்தில் உருகி உருகி குழைந்தாலும் பிரயோஜனமில்லையாம் !!

1யோ 5:2  நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து *அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது*, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

1 யோ 3:14-15  நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிவோம். சகலமும் நேர்த்தியாகும்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக