*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
தேவனுடைய நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக..
ஜனங்கள் பார்வையில் சரீர உறவுகள் மேன்மையாய்ப்பட்டது.
இயேசுவை நோக்கி அங்கு கூடியிருந்த ஜனங்கள்:
இதோ உம்முடைய தாயும் சகோதரரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றனர் – மத் 12:47 (அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையா என்ற ரீதியில் சொல்லப்பட்ட தகவல் இது – மத் 12:46)
எனக்கு அவரை தெரியும், இவரைத் தெரியும், என்னுடைய மச்சான் தான், மாமன் தான், உறவினர் தான், என் அப்பா தான் பாஸ்டர், என் உறவினர் தான் டீக்கனார், என் சொந்தக்காரர் தான் மூப்பர், பிஷப் என்று கிறிஸ்தவத்தில் உரிமை கொண்டாட முடியாது !!
அப்படி சொன்ன வேளையில் கிறிஸ்துவின் உடனடி பதிலை கவனிக்கவும்:
“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி *செய்கிறவன் எவனோ*, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். மத் 12:50
*வேறொரு இடத்தில்* :
இப்படிபட்ட அற்புதமான ஒருவரை குழந்தையாய் சுமந்த கர்ப்பம் பாக்கியமுள்ளது என்றாள் இன்னொரு பெண். லூக்கா 11:27
அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, *அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே* அதிக பாக்கியவான்கள் என்றார். லூக்கா 11:28
*இன்னுமொரு இடத்தில்* :
பரலோகத்திலிருக்கிற என் *பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே* பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்றார். மத் 7:20
ஆம்,
சரீர உறவுகளோ,
கிறிஸ்துவை அறிந்திருத்தலோ,
ஓங்கி பிரசங்கிப்பதாலோ,
எந்நேரமும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்வதாலோ,
பாடல்களை பாடுவதாலோ,
ஆராதனையை உற்சாகமாக நடத்துவதாலோ,
எதற்கெடுத்தாலும் அல்லேலூயா அல்லேலூயா என்று உச்சரிப்பதாலோ,
தேவன் நம்மை அங்கீகரித்துவிடுவதில்லை !!
அவையெல்லாம் நம் கிரியைகள் !!
அவர் எதிர்பார்ப்பதெல்லாம் :
தேவனுடைய வார்த்தைக்கு *அப்படியே கீழ்படிதல்* !!
சரீர பிரகாரமாக உள்ள உறவை அல்ல, கிறிஸ்துவின் கட்டளைப்படி கீழ்படியும் போது – பிதாவானவரே நம்மை கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு அங்கமாகவே இணைத்து விடுகிறார. அப் 2:47
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக