வெள்ளி, 27 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 27 நவம்பர் 2020


 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee


நம்மை பாவத்திலிருந்து மீட்டு எடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

இயேசு கடவுள் என்றால் – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யார் கடவுள் என்று சிலருக்கு கேள்வி.

மனிதனால் *உருவாக்கப்பட்ட கடவுள் இல்லை இவர்.
கற்பனையாலும், காவியத்தாலும் உருவாக்கப்பட்ட கடவுளும் இல்லை* அவர்.

அவர் உலகத்தை உண்டாக்கியவர், யோ.1:3
ஆதி முதல் இருக்கிறவர், யோ.1:2
மனுஷனை மனுஷனோடு,
அவன்  பார்வையில்,
அவன் சூழ்நிலையில் இருந்து,
பாவம் செய்யாமல் வாழ முடியும் என்று நிரூபித்து, எபி.7:26
ஒவ்வொரு வருடமும் பாவ மன்னிப்பிற்கென்று பலி செலுத்தும் முறையை நிறுத்தி, எபி. 9:25-10:10
உலகத்தின் எல்லா ஜனங்களுக்கும் ஒரே ஜீவ பலியாய் தன்னையே தன் பிதாவிற்கு ஒப்புக்கொடுக்க உலகத்தின் இரட்சகராக பூமியில் பிறந்தார். 1யோ.2:2

ஏழையின் உருவை எடுத்து வந்தவர். யோ.7:41, மாற்கு 6:3

திக்கற்றவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும்,
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும், தேடி வந்தவர். யோ.14:18, மத் 18:20, லூக். 7:12-13, மத். 9:11, மாற்கு 2:16, லூக். 5:30

தப்பு செய்தால் கண்ணை குத்துவதோ,
நாக்கை பிடுங்கவதோ,
பல்லை உடைப்பதோ இல்லாமல் அவர்களுக்கு மன்னிப்பை கொடுத்து தண்டனையிலிருந்து மீட்க வந்தவர்.லூக். 5:32, எபி. 2:1-4

எந்த வகை கொடிய பாவம் செய்தவர்களையும்,
தன் தவறை உணறும்பட்சத்தில், தன் வார்த்தைக்கு கீழ்படிவதன் மூலம் பரிசுத்தப்படுத்தி பரலோகத்திற்கு கொண்டு செல்பவர். அப் 2:38, 22:16

ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட சமுதாயமும்,
அரசாங்கத்தினால் குடிமதிப்பில் கூட சேர்க்கப்பட்டாத ஆடு மேய்ப்பவர்களை சந்திக்க, இயேசுவானவர் இவ்வுலகத்தில் பிறந்த அன்றே, தன் தூதர்கள் மூலமாக தள்ளப்பட்டவர்களுக்கு முதல் தகவல் விட்டவர். லூக்கா 2:8-14

டிசம்பர் 25ந் தேதி பிறந்தார் என்று எந்த ஒரு பதிவும் வேதாகமத்தில் இல்லை. ஆகவே, கற்பனையாக பிணைக்கப்பட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உண்மைக்கு செவிசாய்ப்போம்.

வீட்டின் முன்பு நட்சத்திரம் தொங்குவது முக்கியமல்ல. இருதயத்திலே இயேசு பிறக்க வேண்டும். அப்போது சுய வாழ்வில் நட்சத்திரமாக ஜொலிப்பார்.

வேதாகமம் ஒரு காவியமோ, கதையோ, கற்பனையோ, சுயமாக ஓரிரு நபரால் எழுதப்பட்ட கவிதையோ அல்ல.. அனைத்தும் பரிசுத்த ஆவியானவர் எழுதிவைத்ததாலேயே பல காலங்களாக பல நபர்கள் மூலமாக எழுதப்பட்டதாயினும் முரண்பாடற்று காணப்படுவதை  வேதாகமம் என்று சொல்லாமல் ”பரிசுத்த வேதாகமம்” எனப்படுகிறது. 2தீமோ. 3:16, 2பேது. 1:20-21, எபி. 4:12, 2சாமு. 23:2

தடயங்களை தேடி இன்றும் கிடைக்காமல், நீதிமன்றங்களையே தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு, சொந்த கற்பனையை சரித்திரமாக்க முயற்சிக்க வேண்டிய அவசியமில்லாதபடிக்கு, *இயேசுவானவர் பிறந்தது எவராலும் அழிக்கமுடியாத சரித்திரம்* !!

கிறிஸ்துவின் மூலம் பிதாவாகிய தேவனை நாம் தொழுது கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள வழிவகுத்தவர். யோ. 14:6

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில :  http://kaniyakulamcoc.worldbibleschool.org/

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக