*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நீடிய பொறுமையாய் இருந்து நம்மை எப்போதும் ஆசீர்வதிக்கும் தேவனின் கிருபை நம்மை இன்னும் ஆட்கொள்வதாக.
எல்லாம் இழந்தபோதும்,
*தேவனையே சார்ந்து*,
பொறுமையாய் இருந்த யோபு,
சோதனைக் காலம் முடிந்தபின்பு இரண்டு மடங்காக ஆசீர்வதிக்கப்பட்டார். யோபு 42:10
தன் சொந்த சகோதரியும், சகோதரனும் தனக்கு எதிராய் முறுமுறுத்த போதிலும், மோசே பொறுமையாய் *தேவனையே சார்ந்து* இருந்ததால், தேவன் தாமே அந்த பொறுப்பை ஏற்று மோசேக்கு தன் மகிமையை காண்பித்தார். எண். 12:1-10
தன்னை சுற்றி போராட்டம் இருந்த வேளையிலும்,
பொறுமையாய், தாவீது *தேவனுக்காக காத்து இருந்ததால்* - பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து அவரை தூக்கியெடுத்து, அவர் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி அடிகளை உறுதிப்படுத்தினார் தேவன். (சங். 40:1-2)
இத்தனை சம்பவங்களும் நமக்கு பாடமாக எழுதப்பட்டுள்ளது. 1கொரி. 10:11
ஆகவே, எத்தனை இடறல்கள் வந்தாலும், நெருக்கடிகள் வந்தாலும், தேவனுடைய கரத்தில் ஒப்புகொடுத்து அவருடைய செயலுக்காக பொறுமையாக இருப்போம். நிச்சயம் அவர் அதை வெற்றியாய் மாற்றி தருவார்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
ஆங்கில வழியில் வேதாகமத்தைப் பயில : http://kaniyakulamcoc.worldbibleschool.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக