ஞாயிறு, 15 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 15 Nov 2020


 

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

தன்னுடைய சரீரமாய் நம்மை மாற்றின  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

செருப்பை வெளியே கழற்றி போடுவதும், சிகரட்டை தூர எரிந்து விட்டு ஆலய கட்டிடத்திற்குள்ளே போய், மேலும் கீழும் குதித்து, புரியாத மொழிகளில் உளறி, வேர்க்க விறுவிருக்க கதறி பாவ மன்னிப்பை கேட்டு, பரிசுத்தவானாக மாறின எண்ணத்தோடு ஊருக்கும் உபதேசத்தை வாரி வழங்கிவிட்டு, பெறுமையோடு வெளியே வந்து மறுபடியும் ஊரை ஏமாற்றியும், பாவமான அனைத்து காரியங்களில் ஈடுபடுவது பலருக்கு பழக்கம்.

மேலும் பலருக்கு, ஒரு அலங்கரிக்கப்பட்ட வேதாகமும் எப்போதும் எரிந்து கொண்டு இருப்பது போல ஒரு சின்ன விளக்கையும் வைத்து நம் ஆண்டவரை ஒரு சின்ன தனி அறைக்குள் அடைத்து பாதுகாப்பாக வைத்த நினைப்பில் பல கிறிஸ்தவ மதத்தினர் இருக்க தான் செய்கிறார்கள்.

இருதயத்தில் ஒரு இடத்தை கேட்ட ஆண்டவரை, அழியும் சரீரத்தை விட ஸ்திரமாக கட்டின தன் வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி அவரை மகிமைப்படுத்துவதாக அவருக்கே ஆலோசனை கொடுத்து வருகிறார்கள்.

உள்ளே பத்திரப்படுத்தி வைக்க அவர் ஒரு விக்கிரகமோ, மரித்துப்போனவரோ, படத்தில் அடக்கி வைக்கக்கூடிய ஒரு சாமியோ  அல்ல. அவர் வல்லமையுள்ள, பராக்கிரமமுள்ள, ஆவியான தேவன்.

உயிரோடு எந்நாளும் ஜீவிக்கும் தேவன் அவர்.

மனுஷனின் கையால் கட்டப்பட்ட கட்டிடங்களில் அல்ல, அவரால் கட்டப்பட்ட கட்டிடமாகிய நாமே அவர் வசிக்கும் ஆலயம்!! (அப் 17:24)

இந்த சரீரமாகிய ஆலயத்தை பயபக்தியோடும் உண்மையோடும் ஆண்டவர் தன்னுள் வசிப்பதை உணர்ந்து, சுத்தபடுத்தி பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரே அதை கெடுத்துபோடுவாராம் !! (1கொரி 3:17)

காலையில் எழுந்ததும் நேரே பூஜை ரூமுக்கு போய் அவரை தேட வேண்டாம்...இருந்த இடத்திலேயே அவரை நினைத்து ஜெபியுங்கள்... அவர் நம் ஜெபத்தை கேட்க ஆவலோடு எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இன்று கர்த்தருடைய நாள். தேவனைத் தொழுதுக்கொண்டு கர்த்தரின் மரணத்தை நினைவுக்கூறுவோம்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr
 

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக