#1037 - *யாத். 17:11ம் வசனத்தில் மோசே கையை உயர்த்திப் பிடித்தபோது இஸ்ரவேலர்கள் வெல்வதும் கைத்தாழ்ந்தபோது தோற்கவும் நடந்த சம்பவத்தை விளக்கவும்*.
*பதில் :*
யாத்திராகமம் 17ம் அதிகாரம் 11 மற்றும் 12ம் வசனத்தைப் பதிவிடுகிறேன்.
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
மோசேயின் கைகளை உயர்த்துவதாலோ, அல்லது கீழே தாழ்த்துவதாலோ, மனித ரீதியாகப் பேசினால், போர் நடந்துக்கொண்டிருக்கும் நிலையை எந்த வகையிலும் பாதிக்காது.
மக்களுக்கு ஒரு அடையாளமாக, தேவனுடைய கோலை அவர் கையில் வைத்திருந்தார். யாத். 17: 9.
கைகளை வானத்திற்கு நேராக உயர்த்தி, விரித்து, ஜெபிப்பது வழக்கம். வசனங்களை கவனிக்கவும்
யாத். 9:29 மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர்.
யாத். 9:33 மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது.
1இரா. 8:22 பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து:
1இரா. 8:38 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,
2நாள. 6:12 கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.
எஸ்றா 9:5 அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து:
யோபு 11:13 நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.
சங். 143:6 என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது.
ஏசா. 1:15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
எனவே யாத்திராகம் 17:11-12ன் இந்தச் செயலால் ஜெபமும் வேண்டுதலும் நோக்கமாக இருக்கலாம்.
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். (யாத். 17:11)
ஆகவே, இந்த விஷயத்தில் கைகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் இந்த இரண்டு விஷயங்களும் நோக்கம் கொண்டவை என்று நாம் முடிவு செய்யலாம்.
கைகள் நீட்டப்பட்டிருக்கும் போது,
அதாவது, ஆத்மாவானது ஜெபத்திலும் வேண்டுதலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்போது, நம்முடைய ஆன்மீக விரோதிகளை நாம் வெல்வது உறுதி என்பது மறுக்கமுடியாத உண்மை.
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக