செவ்வாய், 10 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 10 Nov 2020


*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

தர்மம் செய்யும் எந்த காரியமும், மறுபக்கத்தில் இருக்கும் நம்முடைய சொந்த கையும் கூட அறியாமல் இருக்கவேண்டும் என்றார் ஆண்டவர் (மத் 6:3)

அதாவது, ஒரு கையால் உதவி செய்ததை மறு கையும் பார்த்து விடாதபடி யாருக்கும் தெரியாமல் மறைமுகமாய் செய்ய வேண்டுமாம். அப்படியாக செய்யப்பட்ட உண்மையான உதவிக்கு, ஆண்டவர் தாமே வெளியறங்கமாய் பலன் தருகிறார். (மத் 6:4)

செய்யும் எந்த உதவியோ, உபவாசமோ, ஜெபமோ, ஊழியமோ - சுயவிளம்பரமில்லாமல் இருக்கவேண்டியது அவசியம் !!

அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது. 1தீமோ5:25  

தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2கொரி10:18

உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். நீதி 27:2

நிச்சயம் தேவன், அவனவனுடைய கிரியைக்குத்தக்கதாக பலனளிப்பார். ரோ 2:6

பரலோகத்தின் தேவன் நம் பிரயாசத்தை இன்னும் அதிகமாய் பெலபடுத்தி நம் நற்கிரியைகளை ஆசீர்வதிப்பாராக.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : புதிய குழு - https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக