திங்கள், 2 நவம்பர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 02 Nov 2020

Young King Holding Scepter Vector Cartoon Clipart - FriendlyStock

தினசரி சிந்தனைக்கான வேத துளி
by : Eddy Joel Silsbee

ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

எத்தனை நாடுகள் நான் சுற்றி இருக்கிறேன்;
எத்தனை ஆயிர ஜனங்கள் தன் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்;
எத்தனை ஊர்களில் போஸ்டர் ஒட்டினார்கள்;
தான் ஜெபித்தால் எத்தனை பேர் குணமடைந்து சாட்சி சொன்னார்கள்;
தான் எத்தனை அற்புதங்கள் நடத்தி காண்பித்தேன்;
எப்படி இருந்த நான் இப்போ எப்படி இருக்கேன் என்று;
"தன் துதி பாடி",
கதை சொல்லி,
ஊர் பாட்டு பாடி,
பழமொழிகள் பேசி,
ஜோக் அடித்து,
இடையிடையே ”அல்லேலூயா சொல்ல சொல்லி”,
ஒரு மணி நேர பிரசங்கத்தில் ”வெகு சில வசனத்தை” கோடிட்டு விட்டு, ஆசீர்வதித்து, ஆமென் என்று மூன்று தடவை சொல்லி முடித்துவிடுவது - தேவச்செய்தி என்று இக்கால பிரசங்க மேடை பேச்சாளரின் ஸ்டைலாக மாறிப்போனது !!

வசனத்தின் விளக்கமோ, சத்தியத்தை போதிக்கவோ, வேதாகம இரகசியங்களின் உட்கருத்துக்களோ, ஜனங்களின் அன்றாட வாழ்வில் வசனத்தின் இன்றியமையாமையை எப்படி தாங்கி செல்வது என்றோ வலைப் போட்டு தேடினாலும் கிடைப்பது அரிதாயிருக்கிறது !!

வாலிபரும் கண்ணிகையரும் தாகத்தோடு வீடு திரும்புகிறார்கள் !!

… கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.
… கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். ஆமோஸ் 8:11-13

ஊருக்கு உபதேசம் என்னும் தொழில் - சொந்த வயிற்றை நிரப்ப உதவலாம்.. ஆனால், சொந்த ஆத்துமாவையும் இழக்க நேரிடும்.

வசனத்தை படிப்பதோடும், கேட்பதோடும், சொல்வதோடும், மனனம் செய்வதோடும் நில்லாமல் - அதை சொந்த வாழ்க்கையில் நடைமுறைபடுத்துவோம்.

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக