சனி, 24 அக்டோபர், 2020

தினசரி சிந்தனைக்கான வேத துளி, 24 Oct 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

சிலுவை மரத்தில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

ஒருவரும் உபயோகிக்க முடியாத அளவிற்கு கசப்பாக இருந்தது *மாராவின் நீர்*

பிரயாணத்து களைப்பில் வந்த முழு இஸ்ரவேல் ஜனங்களும் குடிக்கும் அளவிற்கு போதுமானதான தண்ணீர் இருந்தும் அந்த தண்ணீரை உபயோகபடுத்த முடியவில்லை.

தன் கசப்பினால், எவருடைய பயன்பாட்டிற்கும் பிரயோஜனப்படாமல், அன்றுவரை அத்தனை காலங்களும் வீணாக கிடந்த நீர் அது.

தன்னுடைய கசப்பினால் – கேட்பாரற்று கிடந்தது.

தேவன் இடைப்பட்டதால், ஒரு மரத்தை அந்த தண்ணீரில் போடச்சொல்ல...கசப்பு நீங்கி மதுரமாய் மாறியது !! (யாத் 15:22-25)
அனைவருக்கும் பிரயோஜனப்பட்டது.

*நாமும்* :
மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லாத அளவிற்கு கசப்பை வைத்து இருந்தால்?

போதுமான திறமை இருந்தும், ஒருவருக்கும் பிரயோஜனமில்லை..

கேட்பாரற்ற வீணான வாழ்க்கையாகும்..

எவரும் விரும்பாத, ஒருவரும் அறியாத சூழ்நிலையாகும் !!

நமக்காய், தேவன் ஏற்படுத்திய இரட்சிப்பாகிய - சிலுவை மரத்தில் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்த இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும் போது சகல கசப்பும், வைராக்கியமுமான வாழ்க்கை மதுரமாய் மாறும்.. (1கொரி 15:1-4, கலா 5:6-23)

அனைவருக்கும் பிரயோஜனப்படுவோம்..
தேவ தயவு நம்மை ஆண்டு கொள்ளும்.
அவருடயை ராஜ்யமாகிய சபையில் (கொலோ 1:13) நாம் இன்னும் உபயோகப்படுவோம்!!

Eddy Joel Silsbee,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக