வெள்ளி, 9 அக்டோபர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 09 Oct 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee

நம் மீது இரக்கமும் கிருபையும் உள்ள தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் உண்டாவதாக.

பணக்காரனோ, ஏழையோ, உழைப்பாளனோ, சோம்பேறியோ, பெரியவனோ, சிரியவனோ எல்லோருக்கும் கஷ்டமும், துன்பமும், மகிழ்ச்சியும், வியாதியும், வேதனையும், சுகமும், துக்கமும், நிச்சயம் உண்டு. பிர 2:14, 9:1-2, சங் 49:10

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எல்லாவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும். பிர 2:15-16,

எப்படி அல்லது எப்போது மீண்டு வருவது என்பது அவரவர் பெற்றுக்கொள்ளும் கிருபையை பொருத்தது. சங் 119:153, புல 5:1, யாத் 3:7-8, சங் 9:13-14

உலகத்தின் அனைத்து நதிகளும் கடலில் போய் ஒன்று சேர்ந்தாலும் ஒரு நாளும் கடல் தன்னிறைவு அடையாதது போல (பிர1:7) மனிதன் நிச்சயம் தன் வாழ்நாளை கடந்து செல்லவேண்டும். குப்பியில் தன்னை அடைத்து வைத்துக்கொண்டாலும் காலத்தை பிடித்துக்கொள்ள அவனால் இயலாது !

கவலைகளும் நெருக்கங்களும் நம்மை எவ்வளவு சூழ்ந்தாலும், அவைகள் நம்மை மேற்கொள்ளாதவாறு நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்து நிற்போம். சங் 25:2, எரே 1:19, 1:8, 15:20-21

எரே 15:20-21 ---
“உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.”

தேவனுடன் ஒன்றியிருந்தால், விடுதலையும், வெற்றியும் நிச்சயம் நம்மை தேடி வரும்.

*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக