*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
by : Eddy Joel Silsbee
நம்மை இரட்சிப்புக்குள் வழிநடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய எந்த செயலுமே அயலானுக்கு பொறாமையை உண்டு பண்ணுகிறது என்று பிரசங்கி சொல்கிறார் (4:4)
நேர்த்தியாய் இருக்க வேண்டும்,
மற்றவர்களை காட்டிலும் என்னுடையது அருமையாக இருக்க வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு எதையும் செய்கிறோம். ஆதி 4:4
செய்யும் காரியத்தில் உத்தமமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் போது கர்த்தர் துணை நிற்கிறார். 1சாமு 18:14, பிர 2:26
தன் செயலில் உத்தமமாய் நடக்கிறபொழுது நம்மை சுற்றியுள்ளவர்கள் அதை கவனிக்க தவறுவதில்லை. 1சாமு 18:15
கர்த்தரோடு நில்லாதவர்கள் நம் செயலை பார்த்து பொறாமை கொள்வதற்கு ஏதுவாய் இருக்கிறது. ஆதி 37:4, 11
அவர்கள் நம்மை அயலானாக பார்ப்பதால் இந்த குணம் வருகிறது......நாம் அவர்களை எப்படி பார்க்கிறோம்?
மற்றவரின் வளர்ச்சி நமக்கு வெறுப்பையும் பொறாமையையும் கொடுக்க அனுமதிக்காமல் நம் மனதை கட்டுப்படுத்தவேண்டியது அவசியம். இயேசுவை சிலுவையில் அறைந்ததற்கு இந்த குணம் காரணமாக இருந்தது. மத் 27:17, யோ 5:18, யோ 11:48
மற்றவர்களுடைய வளர்ச்சி,
உயர்வு,
மேன்மை,
இப்படி எதுவும் நமக்கு - பொறாமையை அல்ல, சந்தோஷத்தைக் கொடுக்கட்டும்... பிலி 2:3, ரோ 12:10, கொலோ 3:8, யாக் 3:14, 16, கலா 5:26
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக