வெள்ளி, 25 செப்டம்பர், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 25 Sep 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

தாழ்மையின் ரூபமெடுத்து நம்மை இரட்சித்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

தன்னுடைய எருசலேம் பவனிக்கு, ஒருவரும் ஏறியிராத *கழுதையை* கொண்டு வர சொன்னார் ஆண்டவர். மாற்கு 11:1-11

 

சண்டையோ, கலவரமோ அல்லது போர் மூண்டாலோ, துரித பிரயாணத்திற்கோ, கவுரவத்திற்காவோ குதிரையின் வேகம் தங்களுக்கு உதவும் என்பதால் பாதுகாவலர்கள், காவலாளிகள், போர் வீரர்கள், இராஜாக்கள் அனைவரும் குதிரையையே பயன்படுத்துவார்கள்.

 

சாதாரண ஜனம் குதிரை வைத்துக்கொள்ள வசதி இல்லாமல் கழுதையை பயன்படுத்துவார்கள்.

 

முழங்கால்களை இடித்துக் கொண்டு நடக்கும் வகையான நம்மூரில் உள்ள கழுதை வகை அல்ல அது..

 

பிரயாணத்திற்கென்று உபயோகப்படும் கோவேறு கழுதைகள் அவை.

 

இந்நாட்களிலும் அரபு நாடுகளின் கிராமங்களில் உபயோகப்படுகிறது !!

 

ஒருவரும் ஏறியிராத கழுதை என்றால் : சவாரி செய்ய இன்னும் பயிற்றுவிக்கப்படாதது என்று அர்த்தம் !!

 

இடப்பக்கம் போ,

வலப்பக்கம் போ,

நில்,

ஓடு,

நட என்று எந்த கட்டளையையும் கேட்டு படித்திராததும்,

நெறியறியாமல், எஜமானனின்றி தன் இஷ்டத்திற்கு வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கழுதையை தான் ஆண்டவர் தேர்ந்தெடுத்தார்.

 

அப்படிப்பட்ட ஒழுங்கற்ற ஒரு கழுதையே, ஆண்டவர் கையில் வந்ததும் சீராக கொண்டு போனது...

 

சொந்த மொழியில் சகல கட்டளையையும் எழுதி,

அதை எடுத்துப்போதிக்க ஊழியர்கள்,

வசனங்களை ஆழமாய் அறிய வியாக்கியான புத்தகங்கள்,

அநுதின தியானம்,

வாராவாரம் தேவசெய்தி,

இடையிடையே குழு ஜெபங்கள்,

விசேஷக்கூட்டங்கள் என்று அனைத்தும் இருந்தும்...

 

ஆறு அறிவுள்ள மனிதன், தன் ஆண்டவரின் கர்த்தரின் கட்டளையை அப்படியே கீழ்படிய ஆயிரம் காரணங்கள் தேடுகிறான் !! 1பேது 4:17, 2:7-8

 

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 1பேது 1:14-15

 

*Eddy Joel Silsbee*,

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

+968 93215440 / joelsilsbee@gmail.com

 

* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக