*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
நம்மை நேசிக்கும் தேவகிருபை தாமே இன்னும் அதிகமாய் நம்மீது பெருகக்கடவது.
நம் செயலையும், பிரயாசத்தையும் அங்கீகரிப்பவரையும், அறிந்தவர்களையும், பாராட்டுகிறவர்களையும், கண்டிக்காதவர்களையும் தங்கள் உதவிக்கு என்று கூடவே வைத்துக்கொள்வது அநேகருக்கு சௌகரியம்.
பவுலையும் அவர் கூடஇருந்த ஊழியர்களையும் (பிலிப்பி பட்டணத்தில்) போகும் இடமெல்லாம் பாராட்டி பறைசாற்றின ஸ்திரீக்கு அப்படிப்பட்ட அங்கீகாரம் கிடைக்கவில்லை !! அவளைக் குறித்ததான சில சிந்தனைகள் இன்று:
(1) மனநலம் குன்றியல்ல, தான் சொல்வதை நன்கு உணர்ந்தவள் அந்த பெண். அப் 16:16
(2) பவுல் பேசுவதற்கு முன்னரே அவர் எப்படிப்பட்டவர் என்றும் அறிந்திருந்தாள். அப் 16:17
(3) அவர்கள் *உன்னதமான தேவனுடைய* ஊழியக்காரர் என்று மற்றவர்களுக்கு சப்தமாய் பறைசாற்றினாள். அப் 16:17
(4) அவர்கள் *இரட்சிப்பின் வழியை காண்பிப்பவர்கள்* நமக்கு அறிவிக்கிறவர்கள் என்றும் அறிந்து அந்த தகவலை கூடியிருந்தவர்களுக்கு சப்தமாக வெளிப்படுத்தினாள். அப் 16:17
(5) ஒரு தடவையல்ல *அநேக நாள்* அதை தீர்க்கமாய் கவனித்தும் இருக்கிறாள். அப் 16:18
இப்படி 5 குணாதியசயங்களையும் கொண்டிருந்தும் *என்ன பயன்*?
இப்படியாக, அநேகர் எல்லா கூடுகைகளிலும், ஆராதனைகளிலும் கலந்து கொள்வார்கள். எந்த தேவ செய்தி கூட்டங்களையும் தவறாமல் பங்கெடுப்பார்கள். சாட்சி சொல்கிறேன் என்று சபைசபையாய் போய் அதை ஊழியமாகவே செய்கிறவர்களும் உண்டு !!
சகலமும் எப்போதும் அறிந்தும், தெரிந்தும், கேட்டும், உணர்ந்தும் தொடர்ந்து அநேக நாள் ஊழியக்கார் பின்னே போனாலும் தேவவார்த்தைக்கு செவிசாய்ப்பது இல்லை. கீழ்ப்படிவது இல்லை. திருந்துவதும் இல்லை !!
கதறி கதறி ஜெபிப்பதிலோ, அடைமொழியாகவே ஸ்தோத்திரம் என்ற வார்த்தையை எப்போதும் உச்சரித்துக்கொண்டிருப்பதாலோ, எந்த ஆராதனையிலும் ஓவென்று அழுது பாவ மன்னிப்பை கேட்டு சுய திருப்திக் கொள்வதாலோ பயனுண்டா? முதலாவது, இரட்சிப்பை சொந்தப்படுத்தாமல் மற்றவர்களுக்கு இரட்சிப்பை குறித்து பறைசாற்றுவதில் என்ன பயன்?
நம்மைக் குறித்து நன்கு அறிந்தவள், போகும் இடமெல்லாம் இவளை ஒரு 5 நிமிடம் பேசச்சொன்னால், ஜனங்கள் மத்தியில் நமக்கு பெயர் உண்டாகும் என்று, இந்த பெண்ணை கூடவே ஊழியக்காரியாக இருக்கலாமே என்று யோசிக்காமல் => பவுல் *சினங்கொண்டு அந்த *ஆவியை விரட்டினாராம்* !! அப் 16:18
தேவ வார்த்தைக்கு கீழ்படியாமல் வேதத்தை தூக்கி கொண்டே மற்றவர்களுக்கு பறை சாற்றுவதில் கவனம் !!
(1)கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிந்து,
(2)விசுவாசித்து,
(3)சுய செயல்பாடுகளை வேதத்தோடு ஒப்பிட்டு பார்த்து களைந்து,
(4)கிறிஸ்துவே இரட்சகர் என்று அறிந்து ஏற்றுக்கொண்டு, வெளிப்படுத்தி,
அபிஷேகத்திற்கென்றோ / உறுப்பினராவதற்கென்றோ இல்லாமல்
(5) பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு
உங்கள் கிறிஸ்தவ பிரயாணம் துவங்கியதா என்று ஆராய்ந்து பார்க்கவும்.
இல்லையென்றால்,
வெட்கப்படாமல் வார்த்தைக்கு கீழ்படியுங்கள். அப் 22:16
தேவகிருபை நம்மை இன்றும் முன்னின்று நடத்துவதாக.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel Subscribe பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee
திங்கள், 21 செப்டம்பர், 2020
*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 21 Sep 2020
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக