*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
-எடி ஜோயல் சில்ஸ்பி.
கிருபையாய் நம்மை இரட்சித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நீதி நேர்மை என்று வாழ்ந்தால் ஒன்றுக்கும் உதவாது, ஊரோடு ஒத்துபோ என்று பொது ஜனம் சொல்லும்.
நமக்கும் அதை கேட்டதும் கொஞ்சம் சலனமாக இருக்கும். கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் நல்லது என்றும் தோன்றும் !!
நீதிமானுக்கு துன்பங்கள் அநேகம் வரும் (சங் 34:19) ஆனாலும் அவை எல்லாவற்றிலிருந்தும் தேவன் நம்மை விடுவிப்பார்.
முடிவு நிச்சயம் நீதிக்கு தான். அதில் மாற்றமே இல்லை.
எப்படிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையாக இருந்தாலும், சொந்த கொள்கையையும் சொந்த கோட்பாடுகளையும் விட்டு கிறிஸ்துவின் சத்தியத்திற்கு செவிசாய்ப்போம். யோ 16:33
தேவனை மாத்திரம் சார்ந்து நீதியாய் நடக்கும் போது, அவருடைய கிருபை நம்மை சூழ்ந்து கொள்கிறது ! சங் 32:10
இன்று கர்த்தருக்குரிய நாள் !!
அவருடைய மரணத்தை நினைவுகூர்ந்து தேவனைத் தொழுது கொள்வோம்.
*Eddy Joel Silsbee*,
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
+968 93215440 / joelsilsbee@gmail.com
* நீங்களும் கேள்வி & வேதாகம பதில் Whatsapp (Locked) இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
** வீடியோ செய்திகளுக்கு YouTube Channel *Subscribe* பண்ணவும் : https://www.youtube.com/joelsilsbee

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக