திங்கள், 31 ஆகஸ்ட், 2020

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 31 Aug 2020

 *தினசரி சிந்தனைக்கான வேத துளி*

By : Eddy Joel Silsbee

 

சகல ஆளுமையையும் உண்டாக்குகிற பிதாவானவர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

அதிகமோ, குறைவோ, சந்தோஷமோ, துக்கமோ - எந்த வருமானமும் தேவன் நிர்ணயித்து தான் நமக்கு கிடைக்கும் என்பதை நாம் மறக்க கூடாது. சங் 37:5,

 

எந்த வேலையாக இருந்தாலும், அதை நேர்த்தியாய் கிரமமாய் செய்ய வேண்டும் என்று வேதம் நமக்கு கட்டளை இடுகிறது. 1கொரி 14:40

 

நாம் செய்யும் எந்த காரியமும் வாய்க்கவும் நம் மந்தையை தக்கவைக்கவும் வேண்டுமானால் கர்த்தரை முதலாவது நாம் தேடவேண்டும். எரே 10:21, ஏசா 48:15

 

சுய புத்தியை சார்ந்து சுய நம்பிக்கையில் செய்யப்படும் கிரியை – நிலைநிற்காது. எரே 2:37

 

எஜமானன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்... மோசமானவனோ அயோக்கியனோ, ஊதாரியோ – அவர் எஜமானன் என்கிற அதிகாரத்தை கொடுத்தது நம் தேவனே என்பதால் நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும். கொலோ 3:24, 1பேது 2:18, ரோ 13:2

 

எஜமானனும் - தன்னுடைய அதிகாரம், மேன்மை, வளர்ச்சி, செல்வாக்கு, சம்பந்து அனைத்தும் சுய உழைப்பினாலே பெற்றது என்று நினைத்துவிடாமல் தேவனுக்கு பயந்திருக்கவேண்டும். ரோ 13:1, எரே 27:5-6, தானி 2:21

 

சகலத்தையும் தேவனே நமக்கு ஆசீர்வதித்து அளந்து தருகிறவர். யாக் 1:17

 

(You may ask for English Version, if required)

 

*Eddy Joel Silsbee*

Preacher – The Churches of Christ

Teacher – World Bible School

WhatsApp # +91 8144 77 6229

 

Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :

https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR

 

வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:

https://www.youtube.com/c/EddyJoels/videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக