*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
என்றென்றும் மாறாதவராகிய தேவனே தாமே தொடர்ந்து வழி நடத்துவாராக.
அவசர அவசரமாக
சாப்பிட்டாலோ,
குடித்தாலோ,
அந்த பதார்த்தத்தின் முழு தன்மையும், ருசியும், நறுமணமும் உணரவே முடியாது.
வயிறு நிரம்பி விடும். தேவை பூர்த்தியாகிவிடும். ஆனால் அதன் உண்மை தன்மை எப்படியிருந்தது என்பதை அறியாமல் விடப்படும்.
நம்முடைய பல ஜெபங்களும் அது போலவே இருக்கிறது.
தேவன் செய்த நன்மைகளை உணர்வதே கிடையாது.
கேட்டது கிடைத்ததும் மறந்து விடுகிறோம்.
அவருடைய தயவு இல்லாமல் எதுவும் நடந்திருக்காது என்பதை பல நேரங்களில் உணர்வதும் இல்லை.
இல்லாததை நினைத்து கொண்டும்,
இல்லாததைக் தேடிக் கொண்டும்,
உள்ளதை கவனிக்காமல் – அங்கீகரிக்காமல் – உணராமல் இருப்பதால்.... தேவனை நாம் ருசித்துப் பார்ப்பது இல்லை... சங் 34:8
காலை துவங்கி இரவு வரை மாத்திரம் அல்ல – உறங்கும் போதும் நம்மை பாதுகாத்து வருகிறவர் நம் தேவன். சங் 121:3-4
அவரை அறிந்தவர்கள்மேல் அவரது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் அவரது நீதியும் தங்குகிறது. சங் 36:10
ஏதோ ஒரு சடங்காக தேவனுக்கு நன்றி சொல்லாமல் – நம் வாழ்க்கையில் அளந்து அளந்து அவர் செய்த சகல நன்மையையும் பொருமையாய் நினைத்துப் பார்த்து அவர் அவரின் செயல்களை ருசித்துப் நன்றி செலுத்துவோம். சங் 63:5
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக