*தினசரி சிந்தனைக்கான வேத துளி*
By : Eddy Joel Silsbee
பிதாவாகிய தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக
போராட்டங்களும், வேதனைகளும், பிரச்சனைகளும், ஏமாற்றங்களும் எப்போதும் வந்து கொண்டே தான் இருக்கும்.
ஆனால் அவை ஒரு போதும், நம் சமாதானத்தை குலைக்க இடம் கொடுக்காதபடிக்கு நாம் தேவனுடைய செட்டையின் கீழே தஞ்சம் கொள்ள வேண்டும்.
தாவீது ராஜா அந்த இரகசியத்தை படித்து வைத்திருந்தார்.
எப்போதெல்லாம் சங்கடங்கள், ஆபத்துகள் வருகிறதோ வேகமாக ஓடி தேவனின் நிழலில் உட்கார்ந்து கொள்வாராம். (சங் 57:1)
சோர்ந்து போகும் போது துவண்டு விடாமல், வேதாகமத்தை திறந்து படிக்க பழகுவோம்.
நம்மோடு தேவன் இடைபட்டு நாம் செய்யவேண்டியதை வசனத்தின் மூலம் நமக்கு உணர்த்துவார்.
இதை எப்படி உணர்வது?
உலகத்தின் பாவத்தை ஆவியானவரே கண்டித்து உணர்த்துகிறார் (யோ 16: 8). பெந்தெகொஸ்தே நாளில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில், ஆவியானவரின் வார்த்தைகள் மனிதர்களை உணர்த்தி, இரட்சிப்பை நாட வழிவகுத்தன (அப் 2: 36-38, மேலும் அப் 24:25ம் கவனிக்கவும்).
யோவான் 3: 3-5 நாம் ஆவியின் "மறுபிறப்பு" என்று கூறுகிறது.
ஆனால், 1 பேதுரு 1: 22-25, நாம் தேவனுடைய வார்த்தையின் “அழியாத விதை” யில் பிறந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. அதாவது, புதிய பிறப்பைக் அடைவதற்கு ஆவியானவர் “தேவ வார்த்தையையே“ வழங்குகிறார்.
யோவான் 6:63 “...ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. ...” என்றார் கிறிஸ்து.
சங்கீதம் 119: 50, 93 “வார்த்தைகள்” மூலம் நாம் உயிர்பிக்கப்படுகிறோம் என்று சொல்கிறது.
ஆவியினாலே நடக்கும்படி கட்டளையிடப்படுகிறோம் (கலா 5:16). நாம் சத்தியத்தில் நடக்கும்போது இதை நிறைவேற்றுகிறோம் (2 யோ 4; சங் 26:3). “உம்முடைய வசனமே சத்தியம்" என்று இயேசு கூறுகிறார் (யோ 17:17).
ஆகவே:
இருட்டில் பளீர் என்று ஒரு பெரிய வெளிச்சம் என்னை சூழ்ந்து கொண்டு அதில் என்னோடு ஆவியானவர் நேரடியாக பேசினார் என்றும்;
மெல்லிய சப்தமாக காதில் ஒலித்தது என்றும்;
கனவில் வெளிப்படுத்தினார் என்றும்;
என்னை பற்றி அறியாத ஒருவர் என்னிடம் வந்து தேவதூதன் போல சொல்லிவிட்டு மறைந்து விட்டார் என்றும்;
சிந்தனையை தூண்டிவிட்டு பறக்கவிடாமல் - வசனத்தின் மூலமாகவே நமக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கிறிஸ்தவத்தில் உத்தமமாக வளருவோம்.
*Eddy Joel Silsbee*
Preacher – The Churches of Christ
Teacher – World Bible School
WhatsApp # +91 8144 77 6229
Bible Q&A (Locked) WhatsApp Groupல் இணைய :
https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ
வீடியோ செய்திகளுக்கு என்னுடைய YouTubeஐ Subscribe செய்யவும்:
https://www.youtube.com/c/EddyJoels/videos

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக